Advertisment

காரைக்கால் - பெங்களூர் பயணிகள் ரயில் என்ஜின் பழுது! பயணிகள் அவதி!

காரைக்காலில் இருந்து பெங்களூருக்கும் பெங்களூரில் இருந்து காரைக்காலுக்கும்பயணிகள் ரயில் தினம்தோறும் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் இன்று காலை காரைக்காலில் இருந்து பெங்களூர் நோக்கி செல்லும் வழியில் சிதம்பரம் ரயில் நிலையத்திற்கு காலை 7.30 மணிக்கு வந்தது.

Advertisment

 Karaikal - Bangalore passenger train engine repaired!

அப்போது ரயில் எஞ்சினை மீண்டும் டிரைவர் இயக்க முயற்சித்தபோது இன்ஜின் பழுது என்று தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து 2 மணி நேரத்துக்கும் மேலாக பயணிகள் ரயில் சிதம்பரம் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதனால் பெங்களூர் வரை செல்லும் பயணிகள், பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் அவதி அடைந்துள்ளனர். மாற்று ஏற்பாடாக விழுப்புரம் அல்லது மயிலாடுதுறை ரயில் நிலையங்களில் இருந்து மாற்று எஞ்சின் வரவைக்க ரயில்வே ஊழியர்கள் ஏற்பாடு செய்துள்ளதாக தகவல்கள் கூறுகிறார்கள்.

Train Karaikal
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe