ADVERTISEMENT

காரைக்கால் அம்மையாருக்கு மாங்கனித்திருவிழா கோலாகலம் நடந்து முடிந்தது

10:51 AM Jun 28, 2018 | Anonymous (not verified)

காரைக்கால் அம்மையார் கோயிலில் மாங்கனித் திருவிழா கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. அறுபத்து மூன்று நாயன் மார்களில் மூன்று பெண் நாயன் மார்கள் இருந்தனர், ஒருவர் மங்கையர்கரசி, மற்றொருவர் இசைஞானியார். மூன்றாவது காரைக்கால் அம்மையார். அவர்களில் இயல் இசையில் புலமையும், அமர்ந்த கோலத்தில் இருந்தவரை சிவனடியார் என்றும், சிவனுக்கே அமுதுபடைத்தவர் என்கிற பெயரையும், அப்பர், சுந்தரர், சம்மந்தர் ஆகியோருக்கு காலத்தால் முந்தியவர் என்றும் இருண்ட காலத்தில் (களப்பிறர் காலம்) காரைக்காலில் சைவ சமய ஒலிவிளக்காக இருந்தவர் காரைக்கால் அம்மையார். காரைக்கால்அம்மையார் தனிக்கோயில் கொண்டு இருக்கும் காரைக்காலில் ஆண்டு தோறும் அவரது சிறப்பை விளக்கும் வகையில் மாங்கனி திருவிழா நடந்துவருகிறது.

ADVERTISEMENT

அந்த காரைக்கால் அம்மையார், வணிக தலைவனாக இருந்த தனதத்தருக்கு மகளாக பிறந்தவர் புனிதவதியார். பேரழகும், தெய்வீக அம்சமும் கொண்டு வளர்ந்தார். அவரை நாகப்பட்டினம் பகுதியில் பெரு வணிகரான இருந்த பரமதத்தருக்கு திருமணம் செய்துகொடுத்தனர். மருமகன் பரமதத்தருக்கு தனதத்தர் காரைக்காலிலேயே பெரும் வணிக நிறுவனத்தை அமைத்துக்கொடுத்தார். அங்கு இருந்துகொண்டிருந்த பரமதத்தரிடம் அப்பகுதியில் உள்ள சிலர் இரண்டு மாங்கனிகளை கொடுத்தனர். அதை வீட்டுக்கு அனுப்பினார் பரமதத்தர். அந்த சமயத்தில் சிவனடியார் ஒருவர் புனிதவதிபரமதத்தரின் வீட்டுக்கு வந்தார். அவரை புன்னைகையோடுவரவேற்று உணவளித்தார் புனிதவதியார். அப்போது கணவர் கொடுத்துவிட்ட இரண்டுமாங்கனிகளில் ஒன்றை அந்தசிவனடியாரின் இலையில் வைத்து சாப்பிடவைத்தார். சாப்பிட்ட சிவனடியார், புனிதவதியாரை வாழ்த்திவிட்டு சென்றுவிடுகிறார். அந்த சமயத்தில் சாப்பிட வீட்டிற்கு வந்த பரமதத்தர் தான் அனுப்பிய மாங்கனியை கேட்டிருக்கிறார். மீதமுள்ள ஒன்றை கொடுத்துள்ளார் புனிதவதியார். அந்த கனியின் ருசி நன்றாக இருப்பதாக கூறி மற்றொன்றையும் கேட்டுள்ளார். செய்வதறியாமல் திகைத்து கைப்பிசைந்து இறைவனை வேண்டிய புனிதவதியாரின் கையில் ஒரு மாங்கனிவந்தது. அதை கண்ட பரமதத்தர் புனிதவதி சாதாரன பெண் அல்ல. தெய்வபிறவி அவளோடு இனி குடும்பம் நடத்தமுடியாது என முடிவெடுத்து இரவோடு இரவாக வெளியூர் சென்று அங்கு ஒரு திருமணம் செய்துகொண்டு வாழ்ந்திருக்கிறார்.

ADVERTISEMENT



இந்த செய்தியை அறிந்த புனிதவதியார் கணவனை காண சென்றிருக்கிறார். புனிதவதியை கண்ட பரமதத்தரோ இரண்டாவது மனைவியோடும், குழந்தைகளோடும் புனிதவதியார் காலில் விழுந்து வணங்கியிருக்கிறார். இதை சற்றும் எதிர்பாராத புனிதவதியார் கணவனுக்கு உதவாத இந்த அழகான கட்டுடல் தேவையா இறைவா, இந்த உடல் ஒழிந்து பேய் உறுவத்தை கொடுத்தறளும் இறைவா என வேண்டி பெற்றார். பேய் உறுவத்தை தனக்கு கொடுத்த இறைவனின் தரிசனத்தை தேடி பல ஊர்களுக்கு சென்றார். கைலாயத்தில் இருக்கு இறைவனை பார்க்க தலைக்கீழாக கைகளால் நடத்துசென்று இறைவனின் திருவடியை அடைந்தார். அந்தகாட்சியைகண்ட சிவபெருமான் அம்மையே என்று அழைத்தாராம். அன்று முதல் காரைக்கால் அம்மையார் ஆனார்.

அந்தஅம்மையாருக்கு ஆண்டு தோறும் மாங்கனித்திருவிழாவை புதுச்சேரி மாநில மக்கள் கொண்டாடிவருகின்றனர். திருமணம் நடக்காதவர்கள், குழந்தை பேறு இல்லாதவர்கள் இந்த திருவிழாவிற்கு வந்து சென்றால் தடைகள் அகலும் என்றே பக்தர்கள் குவிகின்றனர். அந்த விழா 26 ம்தேதியும், 27 ம் தேதியும் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டுவருகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT