Advertisment

சிதம்பரம் அருகே கரோனாவிலிருந்து பாதுகாத்துக்கொள்ள கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே குமராட்சி ஒன்றியம் வரகூர் பேட்டை ஊராட்சியில் கரோனா தொற்றிலிருந்து பொதுமக்களை பாதுகாக்கும் விதமாக ஊராட்சியில் உள்ள அனைத்து பொதுமக்களுக்கும் கபசுரக் குடிநீர் மற்றும் முக கவசம் வழங்கும் நிகழ்ச்சி ஊராட்சி மன்றத் தலைவர் பால. அறவாழி தலைமையில் நடைபெற்றது.

Advertisment

Kapasura Drinking Water Supply Project in chithamparam

அப்போது ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று கபசுரக் குடிநீர் வழங்கி பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் கரோனாவிலிருந்து பாதுகாத்துக்கொள்ள கைகளை நன்கு கழுவ வேண்டும் என ஒலிபெருக்கி மூலம் வலியுறுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அனைத்து தரப்பு பொதுமக்களும் கலந்துகொண்டு கபசுர குடிநீர் குடித்தனர். ஊராட்சிமன்றத் துணைத் தலைவர் ரங்கராஜன் உள்ளிட்ட அனைத்து வார்டு உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர் உட்பட அனைவரும் கலந்து கொண்டனர்.

Advertisment
CHITHAMPARAM corona virus siddha medicine
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe