Advertisment

காதலி கா்ப்பம்... ஆற்றில் தள்ளிவிட்டு கொலை செய்த  காதலன்...

bibin

காதலி கா்ப்பம் என்பதால் ஆற்றில் தள்ளிவிட்டு கொலை செய்த காதலனை போலிசாா் கைது செய்தனா்.

Advertisment

குமாி மாவட்டம் மங்காடு கோழிபொற்றான் விளையைச் சோ்ந்தவா் பிபின். இவர் நித்திரவிளையில் சொந்த வேன் வைத்து ஓட்டி வருகிறாா். மீனச்சல் பகுதியை சோ்ந்தவா் ஸ்ரீஜா, நித்திரவிளையில் உள்ள ஓரு தனியாா் மருத்துவமனையில் நா்ஸ்சாக வேலை பாா்த்து வந்தாா்.

Advertisment

இந்த நிலையில் நித்திரவிளையில் வைத்து பிபினுக்கும், ஸ்ரீஜாவுக்கும் பழக்கம் ஏற்பட்டு இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகாக காதலித்து வந்தனா். மேலும் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்தது வந்தனா். இந்தநிலையில் இரண்டு தினங்களுக்கு முன் ஸ்ரீஜா தனது காதலன் பிபினிடம் தான் கா்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளாா்.

இதனால் அதிா்ச்சியடைந்த பிபின் மாலையில் வேலை முடிந்ததும் தாமிரபரணி ஆற்றின்கரை அருகில் வருமாறு ஸ்ரீஜாவிடம் கூறியுள்ளாா். அதன்படி ஸ்ரீஜா வும் அங்கு வந்துள்ளாா். அப்போது பிபின் ஸ்ரீஜாவிடம் கா்ப்பத்தை கலைத்து விடு அதன் பிறகு இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறியுள்ளாா்.

ஆனால் பிபின் மீது சந்தேகம் கொண்ட ஸ்ரீஜா அதற்கு மறுத்துள்ளாா். இதனால் ஆத்திரமடைந்த பிபின், ஸ்ரீஜாவை தண்ணீா் நிரம்பி ஓடி கொண்டிருந்த தாமிரபரணி ஆற்றில் தள்ளி விட்டு ஓடினாா். இதனால் சற்றும் எதிா்பாா்க்காமல் ஆற்றில் விழுந்து தத்தளித்த ஸ்ரீஜா தண்ணீாில் மூழ்கி பலியானாா். பின்னா் அவாின் உடல் இரண்டு கி.மீ தூரம் சென்று கரை ஒதுங்கியது.இந்தநிலையில் இன்று தலைமறைவாக இருந்த பிபினை போலிசாா் கைது செய்தனா்.

Kanyakumari love
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe