Advertisment

விவகாரத்து கேட்பதற்கு மனைவி சொன்ன காரணம்... அதிர்ச்சியில் உறைந்த கணவர் எஸ்.பி.யிடம் புகார்...

k

Advertisment

குமரி மாவட்டத்தில் பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி கரம் பிடித்த காதலியின் கள்ள காதலால் மனமுடைந்த காதலன் எஸ்.பி.யிடம் புகார் கொடுத்துள்ளார்.

மணவாளக்குறிச்சியை சோ்ந்த ராஜகோபால் 2008-ல் மண்டைக்காடு கோவிலுக்கு சென்றபோது அங்கு வந்த பத்மனாபபுரம் அருகே சாரோடை சோ்ந்த அனுஷாவும் ஒருவருக்கொருவா் பார்த்து இருவரும் காதல் வயப்பட்டு பெற்றோருக்கு தெரியாமல் காதலா்களாக சுற்றி திரிந்தனர். நாளடைவில் இவா்களின் காதல் விவகாரத்தை தெரிந்த பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் இருவரும் நண்பா்கள் உதவியுடன் திருமணம் செய்து கொண்டனா். பின்னா் கொஞ்ச நாளில் அனுஷா வீட்டில் இருவரையும் ஏற்றுக்கொண்டனா்.

இந்த நிலையில் ராஜகோபால் மனைவியை அவரது பெற்றோர் வீட்டில் விட்டுட்டு துபாய்க்கு ஒட்டல் வேலைக்கு சென்றார். அவா்களுக்கு ஓரு ஆண் குழந்தையும் உள்ளது. இதனை தொடா்ந்து ராஜகோபாலையும் அவனுடைய பெற்றோர்கள் ஏற்று கொண்டனா். இந்த நிலையில் தான் கடந்த பிப்ரவரி மாதம் அனுஷா ராஜகோபாலிடம் விவகாரத்து கேட்டு மணவாளக்குறிச்சியில் உள்ள அவரது வீட்டுக்கு விவகாரத்து நோட்டீஸ் அனுப்பினார்.

Advertisment

இதையடுத்து துபாயில் இருந்து ராஜகோபால் உடனே ஊருக்கு வந்தார். இந்த நிலையில் தான் கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி மாலை மாவட்ட எஸ்.பி.யிடம் மனு கொடுத்த ராஜகோபால் நம்மிடம் கூறும்போது, மனைவி விவகாரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பியது எனக்கு அதிர்ச்சியாகத்தான் இருந்தது. இருந்தாலும் என்னுடைய 11 வயது மகனின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவளை சமாதானம் செய்து அவளுடன் சோ்ந்து வாழ முயற்சி செய்தேன். பின்னா் குழித்துறை மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தேன்.

அங்கு விசாரணைக்கு வந்த மனைவி அனுஷா 5 மாதம் கா்ப்பமாக இருப்பதாக கூறியதால் அதிர்ச்சியடைந்தேன். அவளின் கா்ப்பத்துக்கு காரணமானர் தக்கலையில் வங்கி ஓன்றில் பணியாற்றும் ஒரு ஊழியர். நான் துபாயில் இருந்து அவளுக்கு அனுப்பும் பணத்தை எடுக்க செல்லும்போது அந்த ஊழியருக்கும் அவளுக்கும் தொடா்பு ஏற்பட்டு கள்ள காதலா்களாக இருந்துள்ளனா். மேலும் நான் அனுப்பிய 55 பவுன் மற்றும் அவள் பெயரில் வாங்கிய இரண்டரை சென்ட் நிலத்தையும் விற்று பணத்தையும் கள்ளகாதலனிடம் கொடுத்துள்ளார்.

இதனால் என்னுடைய மகன், நகை, நிலத்தையும் என்னிடம் ஒப்படைக்க வேண்டுமென்று எஸ்.பி.யிடம் புகார் கொடுத்துள்ளேன். பெற்றோரின் பேச்சை கேட்காமல் காதலிதான் எல்லாமே என நினைத்து நம்பி சென்ற என் வாழ்க்கையை அழித்து விட்டார்கள் என கூறினார்.

divorce wife husband
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe