கன்னியாகுமரி கோவிலில் வீற்றிருக்கும் பகவதி அம்மன், தான் எப்போதும் கன்னியாகவே இருக்க வேண்டும் என்று சிவபெருமானை பார்த்து கடலின் நடுவே அமைந்துள்ள பாறையில் ஒற்றைகாலில் தவம் இருந்தார். அந்த பாறையில் அம்மனின் கால்தடம் பதிந்திருந்தது. 1892-ம் ஆண்டு கன்னியாகுமரி வந்த சுவாமி விவேகானந்தர் அந்த பாறைக்கு சென்று அம்மனின் கால் தடத்தை பார்த்தபடி தியானம் செய்தார்.

Advertisment

 Kanyakumari Vivekananda Memorial Hall  golden jubilee inauguration in president participate

இதை தொடர்ந்து விவேகானந்தர் தியானம் இருந்த பாறையில் 1970 ஆம் ஆண்டு செப்டம்பர் 2-ம் தேதி நினைவு மண்டபம் கட்டி முடிக்கபட்டது. அந்த நினைவு மண்டபத்தின் 50- வது பொன் விழா ஆண்டு அடுத்த மாதம் 11-ம் தேதி “மகா சம்பர்க்க அபியான்” என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் டெல்லியில் விவேகானந்தர் கேந்திரா நிர்வாகிகள் முன்னிலையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பொன் விழா ஆண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைக்கிறார். பின்னர் நாடு முமுவதும் பல்வேறு மாநிலங்களில் பொன் விழா கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை விவேகானந்தர் கேந்திரா நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.