தமிழகம் மற்றும் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் ஜனவரி 8- ஆம் தேதி குமரி மாவட்டம் களியக்காவிளை சோதனை சாவடியில் பணியில் இருந்த எஸ்.எஸ்.ஐ வில்சன் சுட்டுக்கொல்லப்பட்டது. இந்த கொலையை செய்த தீவிரவாதிகளான அப்துல் சமீம் மற்றும் தவ்பீக் இருவரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கை என்ஐஏ விசாரித்து வருகிறது.

Advertisment

kanyakumari ssi wilson incident his family government job order

சுட்டுக்கொல்லப்பட்ட வில்சனின் குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாய் நிவாரண நிதி மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன் படி வில்சனின் மனைவி மற்றும் இரு பெண் குழந்தைகள் மற்றும் மருமகனை சென்னைக்கு நேரில் அழைத்து முதல்வா் எடப்பாடி பழனிச்சாமி ரூபாய் ஒரு கோடிக்கான காசோலையை வழங்கினார்.

இந்த நிலையில் வில்சனின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலைக்கான உத்திரவாதத்தையும் நிறைவேற்றும் விதமாக நேற்று (28/02/2020) வில்சனின் மூத்த மகள் ஆன்டிஸ்ரிநிஜாவுக்கு வருவாய் துறையில் இளநிலை உதவியாளருக்கான பணி நியமன ஆணையை அரசு சார்பில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் மற்றும் மாவட்ட ஆட்சியா் பிரசாந்த் வடநேரே வழங்கினர்.