Skip to main content

பல ஆண்டுகளாக குண்டும் குழியுமாகக் கிடந்த ரோடுகள் முதல்வர் வருகைக்காக பளீச் ஆனது!

Published on 17/09/2020 | Edited on 17/09/2020

 

Kanyakumari Roads are getting ready to CM visit


குமரி மாவட்டத்தில் நாகா்கோவில் மாநகராட்சி ரோடுகளும் அதேபோல் தேசிய நெடுஞ்சாலை ரோடுகளும் குண்டும் குழியுமாகதான் இணைந்திருக்கும். இதைத்தான் கடந்த பல ஆண்டுகளாக பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்தோடு பயன்படுத்தி வருகிறார்கள்.

 

நாகா்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டத்திற்காக தோண்டப்பட்ட ரோடுகள் கடந்த 7 ஆண்டுகளாகச் சரிசெயப்படாமல் குண்டும் குழியுமாகக் காணப்பட்டு வருகின்றன. இதனால் மாநகராட்சிக்குட்பட்ட 51 வார்டுகளிலும் சாலையைச் சீரமைக்க கேட்டு, பல கட்டங்களாக மக்கள் போராடி வந்தனர்.

 

இதேபோல் தி.மு.க, எம்.எல்.ஏக்கள் சுரேஷ்ராஜன், ஆஸ்டின் மற்றும் தி.மு.கவினரும் போராட்டங்கள் நடத்திவந்தனா். அதேபோல் தேசிய நெடுஞ்சாலையான கன்னியாகுமரி டூ களியக்காவிளை சாலை குண்டும் குழியுமாக இருந்தது. இதைச் சரிசெய்ய கேட்டு தி.மு.க, எம்.எல்.ஏ, மனோ தங்கராஜ் 16 கிமீ தூரம் நடந்தே வந்து கலெக்டா் அலுவலகம் முன் போராட்டம் நடத்தினார். மேலும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களான ராஜேஷ்குமார், பிரின்ஸ், விஜயதரணி மற்றும் காங்கிரசார் தேசிய நெடுஞ்சாலைகளில் ஆளை விழுங்கும் குண்டுகளை நிரப்ப வலியுறுத்தி, சாலை மறியல் நடத்தினார்கள்.ஆனால், எந்த ஒரு நடவடிக்கையும் அரசோ அதிகாரிகளோ எடுக்கவில்லை.

 

Kanyakumari Roads are getting ready to CM visit

 

இந்த நிலையில் 22-ஆம் தேதி முதல்வா் எடப்பாடி பழனிசாமி குமரி மாவட்டத்திற்கு கரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்ய வருகிறார். இதையடுத்து குண்டும் குழியுமான சாலைகளைச் சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனா்.  நாகா்கோவிலில் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கும் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து தூத்துக்குடிவந்து அங்கிருந்து கார் மூலம் நாகா்கோவில் வருகிறாரா? அல்லது அங்கிருந்து கன்னியாகுமரி வந்து தங்கிவிட்டு நாகா்கோவில் வருகிறாரா? அல்லது திருவனந்தபுரம் வந்து நாகா்கோவிலுக்கு வருகிறாரா? என்று முதல்வரின் பயணத் திட்டம் முடிவு செய்யப்படாததால், அவா் எந்த வழியாக வந்தாலும் சாலைகள் குண்டும் குழியுமாக இல்லாமல் பளீச் என்று இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் மூன்று வழிகளான தேசிய நெடுஞ்சாலைகளைச் செப்பனியிடும் பணிகள் விரைவாக நடந்து வருகிறது.

 

Ad

 

அதேபோல் திரும்பிய பக்கமெல்லாம் குண்டும் குழியுமாகக் கிடந்த நாகா்கோவில் மாநகராட்சி ரோடுகளும் பளீச் ஆகி வருகிறது. கலெக்டா் அலுவலக சாலைகள், வடசேரி சாலைகள் வண்ணமயமாக பச்சைப் பசேலென காட்சியளிக்கிறது. பொதுமக்களும் மக்கள் பிரதிநிதிகளும் எத்தனையோ போராட்டங்கள் நடத்தி கண்டுகொள்ளாமல் இருந்த அதிகாரிகள், முதல்வா் வருகையால் இரவு பகலாக சாலைகளைச் சீரமைக்க பாடுபடுவதை வேடிக்கையாகப் பேசி வருகின்றனா் அப்பகுதி மக்கள். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விசாரணைக் கைதி மரணம்; எடப்பாடி பழனிசாமி கண்டனம்!  

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
Tiruvallur incident Edappadi Palaniswami condemned

விசாரணை கைதி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள  எக்ஸ் சமூக வலைத்தளப் பதிவில், “திருவள்ளூர் மாவட்டம் செவ்வாய்ப்பேட்டையில் காவல்துறை விசாரணைக் கைதி சாந்தகுமார் என்பவர் காவல்நிலையத்தில் உயிரிழந்ததாகவும், பிரேத பரிசோதனையில் அவர் உடம்பில் ரத்தக்கட்டு, வீக்கம் உள்ளிட்ட காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் வருகின்ற செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.

திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்தே தமிழ்நாட்டில் காவல் மரணங்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கும் நிலையில், இதுவரை அதனை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல், காவல் மரணங்கள் குறித்த திரைப்படங்கள் மட்டும் பார்த்துவிட்டு தன் மனம் அதிர்ந்து போனதாக நீலிக்கண்ணீர் வடிக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கு எனது கடும் கண்டனம். பொதுமக்களிடமும், விசாரணைக் கைதிகளிடமும் சட்டத்தின் வரையறைகளுக்கு உட்பட்டு மட்டுமே நடந்துகொள்ள வேண்டுமென காவல்துறையினரையும், அதற்கான உரிய உத்தரவுகளை காவல்துறைக்கு பிறப்பிக்குமாறு முதல்வரையும் வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

கன்னியாகுமரியில் அமித்ஷா ரோடு ஷோ!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Amitsha Road Show in Kanyakumari

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதன்படி திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

அந்த வகையில் தேர்தல் பிரச்சாரத்திற்காக இரண்டு நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வந்துள்ளார். இந்த பயணத்தின் போது பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார். அதன்படி இன்று (13.04.2024) கன்னியாகுமரியில் பாஜக வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணனையும், விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கான வேட்பாளர் நந்தினியையும் ஆதரித்து ரோடு ஷோ நடத்தினார். தக்கலை பேருந்து நிலையத்தின் சந்திப்பு பேருந்து நிலையத்தில் இருந்து காவல் நிலையம் வழியாக சென்று மேச்சகிரை பகுதியில் நிறைவடைந்தது. இந்த ரோடு ஷோவின் போது அமித்ஷா கையில் தாமரை சின்னத்தை கையில் ஏந்தியவாறு வாகன பேரணியில் ஈடுபட்டார்.

இது குறித்து அமித்ஷா தனது எக்ஸ் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கன்னியாகுமரி சாலைப் பேரணியில் பா.ஜ.கவுக்கு கிடைத்த அமோக ஆதரவு, பிரதமர் .நரேந்திர மோடி மீது தமிழக மக்கள் வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கையை பிரதிபலிக்கிறது. தமிழ் மொழியையும் கலாச்சாரத்தையும் உலக அரங்கில் உயர்த்தியவர் பிரதமர் மோடி மட்டுமே. கன்னியாகுமரி (தமிழ்நாடு) மக்களின் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார்.