Advertisment

மருத்துவ மாணவி தற்கொலை; பேராசிரியர் கைது

kanyakumari medical college student related issue professor incident

தனியார் மருத்துவக் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கல்லூரியின் பேராசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisment

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில், தூத்துக்குடி மாவட்டம் காரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த மாணவி சுகிர்தா என்பவர் முதுகலை (எம்.டி.) 2 ஆம் ஆண்டு மருத்துவம் படித்து வந்தார். இந்நிலையில் இவர் கடந்த 6 ஆம் தேதிகல்லூரி ஹாஸ்டலிலுள்ள அவருடைய அறையில், அறுவை சிகிச்சையின் போது தசைகளைத்தளர்வடையச் செய்யும் ஊசி மருந்தை தனது உடலில் செலுத்தி தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவம், சக மாணவர்கள் மற்றும் அம்மாணவியின் உறவினர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. அம்மாணவியின் உடலைக் கைப்பற்றிய போலீசார், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisment

அதே சமயம் தற்கொலை செய்துகொண்ட மாணவி, பேராசிரியர் பரமசிவம், சீனியர் மாணவர்கள் ஹரீஷ் மற்றும் பிரீத்தி ஆகியோரின் பெயர்களைக் குறிப்பிட்டு கடிதம் எழுதி வைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக தனியார் மருத்துவக் கல்லூரியின் துறைத் தலைவரும்பேராசிரியருமான பரமசிவத்தை போலீசார் கைது செய்துள்ளனர்.தற்கொலை செய்து கொண்ட மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் மேலும் இருவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Kanyakumari police
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe