Advertisment

கன்னியாகுமரி மக்களவை தொகுதி காலியானதாக அறிவிப்பு!

kanyakumari lok sabha constituency lok sabha secretariat

கன்னியகுமாரி மக்களவை தொகுதி காலியாக உள்ளதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது.

Advertisment

காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் மறைவையடுத்து கன்னியாகுமரி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டதால் ஆறு மாதத்தில் கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்க வாய்ப்பிருப்பதாகவும், இடைத்தேர்தலுக்கான ஏற்பாடுகளை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும் என தகவல்கள்கூறுகின்றன.

Advertisment

இதனிடையே கன்னியாகுமரி அகஸ்தீஸ்வரத்தில் தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த், "அரசியலில் விருப்பம் இருக்கிறது; ஆனால் தற்போதைக்கு தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை. அப்பா நண்பர்கள் பலரும் நான் தேர்தலில் போட்டியிட வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் உறுப்பினரான நான் கட்சி தலைமை என்ன சொல்கிறதோ அதன்படி செயல்படுவேன்" என்றார்.

h. vasanthakumar Kanyakumari lok sabha
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe