Advertisment

அரசு மருத்துவமனையில் காதலனுடன் தனி அறைக்கு சென்ற நர்ஸ்; அறையைப் பூட்டிய பொதுமக்கள்!

Kanyakumari kulasekaram government hospital nurse and ambulance driver

Advertisment

கரோனா காரணத்தினால் அரசு தாலுகா மருத்துவமனைகளில் உள் நோயாளிகளும் இல்லாமல் வெளி நோயாளிகளின் வருகையும் அடியோடு குறைந்துள்ளது. இதனால் அந்த மருத்துவமனைகளில் டாக்டர்கள், நர்ஸ்கள் மற்றும் ஊழியா்கள் என்ன பணிகளை செய்கிறார்கள். அங்கு என்ன நடக்கிறது என்று பொதுமக்களும் சமூக ஆா்வலா்களும் கேட்கும் நிலையில் குமரி மாவட்டம் குலசேகரம் அரசு மருத்துவமனையில் நர்ஸ் ஒருவர் காதலனுடன் மருத்துவர் அறையில் சல்லாபத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குலசேகரத்தில் 108 வாகனத்தில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார் மார்த்தாண்டத்தை சோ்ந்த திவ்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் ஏற்கனவே ஆரல்வாய்மொழியில் 108 வாகனத்தில் செவிலியராக பணிபுரிந்தபோது அந்த வாகனத்தின் டிரைவராக இருந்த பாபுவை காதலித்து வந்துள்ளார். ஒரே வாகனத்தில் இருவரும் பணிபுரிந்து வந்ததால் அவர்களுடைய காதலும் நெருக்கமாகி வளர்ந்துவந்தது.

இந்தநிலையில் திவ்யாவுக்கு பணியிடமாகி குலசேகரத்துக்கு வந்தார். இதனால் காதலா்கள் இருவரும் சந்திப்பதில் இடையூறுகள் ஏற்பட்டன. இருந்த போதிலும் செல்ஃபோனில் மணிக்கணக்கில் பேசி காதலை மெருகேற்றி வந்தனர். இதற்கிடையில் காதலனை பார்க்க ஆசைப்பட்ட திவ்யா காதலனை குலசேகரம் மருத்துவமனைக்கு அழைத்துள்ளார். காதலன் பாபுவும் காதலிக்கு பிரியாணி மற்றும் தலையில் வைக்க பூவோடு வந்துள்ளார். மதியம் நேரம் என்பதால் மருத்துவமனையில் மருத்துவரும் இல்லை நோயாளிகளும் இல்லை.

Advertisment

Kanyakumari kulasekaram government hospital nurse and ambulance driver

இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி காதலர்கள் மருத்துவரின் அறையைப் பூட்டி அங்கு சல்லாபத்தில் ஈடுபட்டுள்ளனர். இதை அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பார்த்துவிட்டு அறையின் வெளியில் பூட்டை போட்டு பூட்டிவிட்டு, பின்னர் குலசேகரம் போலீஸுக்கு மருத்துவனையில் திருடன் நுழைந்து விட்டான் என்று தகவல் கொடுத்தனர். இதனை தொடா்ந்து போலீசார் அங்குவந்து அறையைத் திறந்து பார்த்தபோது அவர்கள் இருவரும் சல்லாபத்தில் ஈடுபட்டிருந்தது உறுதிபடுத்தபட்டது.

இதைத்தொடர்ந்து காதலனை போலீசார் எச்சரித்து அனுப்பினார்கள் மேலும் திவ்யா மீது துறை ரீதியாக நடவடிக்கைக எடுக்க போலீசார்பரிந்துறை செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Government Hospital Kanyakumari
இதையும் படியுங்கள்
Subscribe