கன்னியாகுமரி அரசு மருத்துவமனையின் கரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் (66 வயது) உயிரிழந்தார். இறந்த நபருக்கு கரோனா தொற்று இருக்கிறதா? என்பது குறித்த மருத்துவ அறிக்கை இன்னும் வரவில்லை என்று தகவல் கூறுகின்றன.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle ||
[]).push({});
இவர் கன்னியாகுமரி மாவட்டம் 'ராஜாக்கமங்கலம் துரை'கிராமத்தைச் சேர்ந்தவர். 66 வயதான இவர் கேரளாவில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்தார். கேரளாவிலிருந்து ஊர் திரும்பிய நிலையில் காய்ச்சல், இருமல் இருந்ததால் கரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த முதியவரின் மகன் சவூதி அரேபியாவில் இருந்து கன்னியாகுமரி மாவட்டம் வந்த நிலையில், அவரது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் கரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த ஏற்கனவே இரண்டு பேர் உயிரிழந்த நிலையில் மேலும் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.