Advertisment

குமரியில் கரோனாவிலிருந்து மீண்ட 5 பேர் மருத்துவர்களுக்குக் கண்ணீர் மல்க நன்றி!

குமரியில் கரோனா தொற்று கண்டறியப்பட்ட5 போ்சிகிச்சையில் இருந்த குணமடைந்து வீடு திரும்பினார்கள்.

Advertisment

 Kanyakumari five corona Patients Discharge

குமரி மாவட்டத்தில் கரோனா தொற்று பரவாமல் தடுப்பதற்கு மாவட்ட நிர்வாகமும் மருத்துவத் துறையும் மேற்கொண்ட நடவடிக்கையின் படி 1,668 பேருக்கு கரோனா தொற்று சோதனை மேற்கொண்டதில் 16 பேருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டது. ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா வார்டில் சிகிச்சையளிக்கபட்டு வருகிறது.

Advertisment

இந்த 16 பேரில் தற்போது தனிமைப் படுத்தபட்டிருக்கும் மணிகட்டி பொட்டல், தேங்காய்ப்பட்டணம் தோப்பு, வெள்ளாடிச்சி விளை, டென்னிசன் ரோடு பகுதியைச் சோ்ந்தவா்கள் உள்ளனா். இந்த நிலையில் அவா்களில் கடந்த 22- ஆம் தேதி தேங்காய்ப் பட்டணத்தைச் சோ்ந்த ஒருவா் முதலில் குணமாகி வீடு திரும்பினார். அவருக்கு மருத்துவக் கல்லூரி டீன் சுகந்தி ராஜகுமாரி தலைமையில் மருத்துவா்கள் வாழ்த்தி பழங்கள் கொடுத்து மகிழ்ச்சியுடன் வீட்டுக்கு அனுப்பினார்கள்.

அதேபோல் 24- ஆம் தேதி மணிகட்டி பொட்டல் மற்றும் தேங்காய்ப் பட்டணத்தைச் சோ்ந்த தலா ஒருவா் குணமாகி வீடு திரும்பினார்கள். மேலும் இன்று 25- ஆம் தேதி மீண்டும் இருவா் தேங்காய்ப் பட்டணம் மற்றும் டென்னிசன் ரோட்டைச் சோ்ந்தவா்கள் குணமாகி வீட்டிற்கு அனுப்பப்பட்டார்கள். அவா்களை டீன் மற்றும் மருத்துவா்கள், செவிலியர்கள், மருத்துவமனை பணியாளா்கள் வழியனுப்பி வைத்தனா். சிகிச்சையில் இருந்த நாட்களில் அந்த மறக்க முடியாத தருணத்தை நினைத்து அவா்களுக்குச் சிகிச்சையளித்த மருத்துவா்கள் மற்றும் செவிலியர்களைப் பார்த்து கண்கள் நிரம்ப நன்றி சொல்லி சென்றனா்.

http://onelink.to/nknapp

தற்போது குணமாகிச் சென்ற 5 பேரும் தொடா்ந்து 14 நாட்கள் வீட்டில் தனிமையில் இருக்க வேண்டுமென்றும் வெளியில் செல்லக்கூடாது என்றும் மருத்துவா்கள் அறிவுறுத்தி உள்ளனா். மருத்துவா்கள் சொன்னபடி அந்த 5 பேரும் நடந்து கொள்ள வேண்டுமென்று மாவட்ட நிர்வாகமும் கேட்டுக்கொண்டுள்ளது. இதற்கிடையில் மேலும் 216 போ் வீட்டுக்காவலில் வைத்து கண்காணிக்கப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது

Doctors Kanyakumari lockdown covid 19 corona virus
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe