களியக்காவிளை சோதனை சாவடியில் பணியில் இருந்த எஸ்.எஸ்.ஐ வில்சனை அப்துல்சமீம் மற்றும் தவ்பீக் இருவரும் கடந்த 8- ஆம் தேதி துப்பாக்கியால் சுட்டு கொன்று விட்டு கேரளாவில் தலைமறைவானார்கள். இது தொடர்பான புகைப்படங்களை வெளியிட்டு இரு மாநில போலீசாரும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837429466-0'); });
இந்நிலையில் வில்சன் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இருவர் கர்நாடகாவில் கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக இருந்த அப்துல் சமீம், தவ்பீக் ஆகியோரை உடுப்பியில் வைத்து கைது செய்தது கர்நாடகா காவல்துறை. விசாரணையில் உடுப்பியில் இருந்து மங்களூரு சென்று அங்கிருந்து நேபாளம் செல்ல இருவரும் திட்டமிட்டிருந்தது தெரிய வந்தது.