கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் வில்சன். களியக்காவிளை காவல்நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் புதன்கிழமை 08- ஆம் தேதி இரவு 08.00 மணிக்கு களியக்காவிளை சந்தைவழியில் இருக்கும் சோதனை சாவடிக்கு பணிக்கு சென்றார். அந்த சோதனை சாவடி வழியாக வாகனங்கள் எதுவும் செல்வது கிடையாது. அப்படி செல்ல வேண்டுமென்றால் மெயின் ரோட்டில் போக்குவரத்து ஏற்பட்டாலோ அல்லது போலீசார் சோதனையில் ஈடுபட்டாலோ மட்டும் தான் இந்த சோதனை சாவடி வழியாக வாகனங்கள் செல்லும்.

Advertisment

kanyakumari sub inspector incident tamilnadu cm order

இதனால் அந்த சோதனை சாவடியில் பணிபுரியும் போலிசாருக்கு எந்த விதமான வேலை பலுவும் இருக்காது. இந்த நிலையில்தான் 08-ம் தேதி இரவு 10.00 மணிக்கு அந்த சோதனை சாவடியில் வில்சன் பணிபுரிந்து கொண்டியிருந்தபோது கேரளா எல்லையான இஞ்சி விளை சந்திப்பில் கேரளாவில் இருந்து கன்னியாகுமரி நோக்கி வந்த ஸ்கார்ப்பியோ வாகனத்தை அதில் நிறுத்தி விட்டு அதிலிருந்து தலையில் குல்லாவுடன் இறங்கிய இரண்டு வாலிபா்கள் சோதனை சாவடி பக்கம் வந்தனா். அதில் ஒருவன் கையில் இருந்த துப்பாக்கியால் சோதனை சாவடியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளா் வில்சனை சுட்டார். இதில் உடனே சம்பவ இடத்திலே துடிதுடித்து வில்சன் இறந்தார். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றன.

Advertisment

kanyakumari sub inspector incident tamilnadu cm order

இந்நிலையில் தமிழக சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் பழனிசாமி, எஸ்.எஸ்.ஐ வில்சனை சுட்டுக்கொன்றவர்களை உடனே கைது செய்ய தென்மண்டல ஐ.ஜி.க்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் எஸ்.எஸ்.ஐ வில்சன் குடும்பத்துக்கு அரசு வேலை வழங்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இதனிடையே காவல் உதவி ஆய்வாளர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகள் என சந்தேகிக்கப்படும் நபர்களின் படங்களை காவல்துறை வெளியிட்டுள்ளது.

Advertisment