கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் வில்சன். களியக்காவிளை காவல்நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் புதன்கிழமையான 08-ம் தேதி இரவு களியக்காவிளை சந்தைவழியில் இருக்கும் சோதனை சாவடிக்கு பணிக்கு சென்றார். அந்த சோதனை சாவடியில் மர்ம நபர்களால் அவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் உயிரிழந்த சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் குடும்பத்திற்கு ரூபாய் 1 கோடி நிதிவழங்கப்படும் என்று தமிழக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். ஏற்கனவே வில்சன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று முதல்வர் பேரவையில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.