களியக்காவிளை சோதனை சாவடியில் பணியில் இருந்த எஸ்.எஸ்.ஐ வில்சனை அப்துல்சமீம் மற்றும் தவ்பீக் இருவரும் கடந்த 8- ஆம் தேதி துப்பாக்கியால் சுட்டு கொன்று விட்டு கேரளாவில் தலைமறைவானார்கள். இது தொடர்பான புகைப்படங்களை வெளியிட்டு இரு மாநில போலீசாரும் தீவிரமாக தேடி வந்த நிலையில் அவர்கள் இருவரும் கடந்த 11ஆம் தேதி கர்நாடகா மாநிலம் உடுப்பியில் கைது செய்யப்பட்டனர்.

Advertisment

kanyakumari-district-ssi-willson-issue

கர்நாடக காவல்துறை அவர்களிடம் நடத்திய விசாரணையில் உடுப்பியில் இருந்து மங்களூரு சென்று அங்கிருந்து நேபாளம் செல்ல இருவரும் திட்டமிட்டிருந்தது தெரிய வந்தது. இந்நிலையில் அவர்கள் இருவரையும் கர்நாடக போலீஸ், குமரி மாவட்ட போலீஸிடம் ஒப்படைத்தது.