கன்னியாகுமரி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 42 அடியை எட்டியது. மேலும், அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 3,169 கனஅடியாக உள்ளது. அதேபோல் 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 73 அடியை எட்டியது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2,474 கனஅடியாக உள்ளது.
இதனிடையே, அணைகளில் இருந்து நீர் திறக்கப்படவுள்ளதால் தாமிரபரணி, பரளி ஆற்றோரம் வசிக்கும்கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.