Advertisment

பிரதமரை அவதூறாகப் பேசியதாகப் புகார்: வாலிபர்கள் இருவர் கைது         

கரோனா வைரஸ் உச்சத்தைத்தொட்டிருக்கும் நிலையில் நாடு முமுவதும் 21 நாட்கள் ஊரடங்கு பிறப்பித்து 13 நாட்கள் முடிந்து விட்டது. இந்த நிலையில் பிரதமா் மோடி 5-ம் தேதி இரவு 9 மணிக்கு 9 நிமிடம் வீடுகளில் மின் விளக்கை அணைத்து விட்டு எண்ணெய் தீபம், மெழுகு வா்த்தி, டார்ச் லைட் மற்றும் செல்போன் லைட் மூலம் ஒளி காட்ட வேண்டும் என்ற வேண்டுகோளின் அடிப்படையில் நேற்று ஜனாதிபதி முதல் மத்திய மந்திரிகள் மாநில முதலமைச்சா்கள் மற்றும் சாதாரண குடிமகன்கள் வரை தீபம் காட்டினார்கள்.

Advertisment

marthandam

இதற்கு சமூக ஊடகங்களில் பல்வேறு தரப்பினா் எதிர்த்து கருத்து தெரிவித்தனர். நெட்டிசன்கள் மீம்ஸ்கள் வெளியிட்டு மோடியின் கருத்துக்கு எதிராக கிண்டலடித்தனா். ஆனால் இதற்கு மேல் மார்த்தாண்டத்தைச் சோ்ந்த 'புள்ளிங்கோ' இளைஞா்கள் 4 போ் மலை அடிவாரத்தில் உள்ள ஒரு பாறை மீது அமர்ந்து ஃபுல் போதையில் பிரதமா் மோடி,வீடுகளில் தீபம் ஏற்ற சொன்னது குறித்து மோசமான வார்த்தைகளால் அவதூறாகப் பேசிய அவா்கள் கடைசியில் நாங்க ஆல்கஹால் புள்ளிங்கோ எனக் கூறி அதைச் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவ விட்டனா்.

இதனால் பாஜகவினரும் இந்து முன்னணியிரும் மார்த்தாண்டம் போலிசில் புகார் கொடுத்தனா். இதைத் தொடா்ந்து மார்த்தாண்டம் கிறிஸ்டல் தெருவைச் சோ்ந்த மிதுன் (22) அதே பகுதி காரவிளையைச் சோ்ந்த பபின் நிஷாந்த் (22) இருவரையும் கைது செய்தனா்.

District Kanyakumari corona virus
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe