Advertisment

'ஜூன் 8- ஆம் தேதி பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சித்தார் அணை திறக்கப்படும்'- முதல்வர் பழனிசாமி அறிவிப்பு!

kanyakumari district dams opening cm announced

ஜூன் 8- ஆம் தேதி முதல் கன்னியாகுமரி மாவட்டம், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சித்தார் 1, 2 அணைகளில் இருந்து பாசனத்திற்கு நீர் திறக்கப்படும் என்று தமிழக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

Advertisment

இது தொடர்பாக தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று கன்னியாகுமரி மாவட்டம், கோதையாறு பாசனத்திற்கு 08-06-2020 முதல் 28-02-2021 வரை நாள் ஒன்றுக்கு, வினாடிக்கு 850 கன அடி வீதத்தில்பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சித்தார் 1 மற்றும் 2 அணைகளிலிருந்து தண்ணீர்திறந்துவிட உத்தரவிட்டுள்ளேன்.

Advertisment

இதனால், கன்னியாகுமரி மாவட்டத்தில் கோதையாறு மற்றும் பட்டணங்கால் பாசனப் பகுதிகளின் 79,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்." இவ்வாறு முதல்வர் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

cm palanisamy dams Farmers Kanyakumari Tamilnadu
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe