Skip to main content

பட்டா நிலத்தில் குடியிருந்த குடியிருப்புகளை இடித்து 48 குடும்பங்களை நிர்கதியாக்கிய மாவட்ட நிர்வாகம்!

Published on 22/08/2019 | Edited on 22/08/2019

வாழ்ந்த வீட்டை விட்டு ஓட வைத்து, ஒரு பெரிய சோகத்தை குமரி மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்தியுள்ளது.

குமரி மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளக்கும் பேச்சிப்பாறை அணை அருகே சீரோபாயிண்ட் பகுதியில் கடந்த 50 ஆண்டுகளாக அரசு கொடுத்த பட்டா நிலத்தில் 48 குடும்பங்கள் வீடு கட்டி வசித்து வருகின்றனர். இவர்கள் அந்த பகுதியில் விவசாயம் மற்றும் கூலி வேலை செய்து வருகிறார்கள்.

 

 kanyakumari District administration demolished 48 houses

 

இந்த நிலையில் தமிழக அரசு பேச்சிப்பாறை அணையை பலப்படுத்துவதற்காக உலகவங்கி நிதியுதவியுடன் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் சீரோபயிண்ட் பகுதியில் இருக்கும் குடியிருப்புகளை அகற்ற அரசு உத்தரவு பிறப்பித்து. இதனையடுத்து அந்த வீடுகளை இடிக்க மாவட்ட நிர்வகம் நடவடிக்கை எடுத்து அந்த மக்களுக்கு மாற்று இடமும் ஒதுக்கப்பட்டது. 

 

 kanyakumari District administration demolished 48 houses

 

இந்நிலையில் அந்த மக்களுக்கு ஒதுக்கப்பட்ட இடம் வசதியில்லாதது என்று அவர்கள் குற்றம் சாட்டினார்கள். இதனால் அந்த மக்களுக்கு ஆதரவாக எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு சாலை மறியல் நடத்தினார்கள். ஒரு நாள் முமுவதும் நடந்த சாலை மறியலை அடுத்து பத்மனாபபுரம் சப்-கலெக்டர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு அதில் முடிவு எட்டப்படாததால் மீண்டும் கலெக்டரிடம் ஆலோசித்து விட்டு அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடத்தலாம் என சப்-கலெக்டர் கூறியதோடு அதுவரை குடியிருப்புகளும் இடிக்க படமாட்டாது என்று கூறினார்.

 

 kanyakumari District administration demolished 48 houses

 

இதை நம்பியிருந்த அந்த குடியிருப்பை  சேர்ந்த மக்கள் நேற்று வழக்கம் போல் அவர்கள் கூலி வேலைகளுக்கும் குழந்தைகள் பள்ளி கல்லூரிகளுக்கு சென்று விட்டனர். வீட்டில் வயதானவர்கள் மட்டும் இருந்தனர். இந்நிலையில் திடீரென்று அங்கு ஜேசிபி மற்றும் ஹிட்டாச்சி வாகனங்களை கொண்டு போலிசோடு அங்கு குவிந்த வருவாய்துறையினர் அந்த 48 வீடுகளையும் இடித்து தரைமட்டமாக்கினார்கள். மேலும் வீடுகளில் இருந்த பொருட்கள் மற்றும் துணி மணிகளை வெளியே தாறுமாறாக வீசினார்கள்.

 

 kanyakumari District administration demolished 48 houses

 

இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மக்கள் எங்கே செல்வது என புரியாமல் அவர்களுடைய பொருட்களை எடுத்து கொண்டு ரப்பர் தோட்டத்தில் குழந்தை குட்டிகளோடு தஞ்சம் அடைந்தனர். தற்போது இனி எப்போது வீடு கட்டி வீட்டுக்குள் தஞ்சம் அடைவது என்ற ஏக்கத்தில் உள்ளனர். மேலும் மாற்று இடத்தில் வீடு கட்டும் வரை வீடுகளை இடிக்க மாட்டோம் என கூறிய அதிகாரிகள் அதற்குள் வீடுகளை இடித்து விட்டார்களே என கதறியவாறு எங்கே செல்வது என்று திசை தெரியாமல் நிர்கதியாக நிற்கிறார்கள். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பள்ளிக்கரணை ஆணவக்கொலை சம்பவத்தில் மீண்டும் அதிர்ச்சி; உயிரை மாய்த்த காதலி

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
nn

சென்னையில் சில மாதங்களுக்கு முன்பு காதல் திருமண எதிர்ப்பால் இளைஞர் ஒருவர் ஓட ஓட வெட்டி ஆணவக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் கொலையான இளைஞனின் காதல் மனைவியும் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன். இங்குள்ள ஜல்லடையான்பேட்டை ஷர்மிளா என்ற பெண்ணை கடந்த சில வருடங்களாக பிரவீன் காதலித்து வந்துள்ளார். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் பிரவீன்-சர்மிளா இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டார் தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில் எதிர்ப்பை மீறி இந்தத் திருமணமானது நடைபெற்றது.

காதல் திருமணத்தை தொடர்ந்து அதே பகுதியில் அவர்கள் வசித்து வந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி ஷர்மிளாவின் சகோதரன் தினேஷ் மற்றும் நண்பர்கள் சேர்ந்து இரவு அந்தப் பகுதியில் இளைஞர் பிரவீன் அமர்ந்திருந்தபோது அவரை சரமாரியாக பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தாக்கினர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞர் பிரவீன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் விசாரணையில் நடந்தது ஆணவக் கொலை என்பது உறுதியானது. கொலையில் ஈடுபட்ட பெண்ணின் சகோதரர் தினேஷ் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

nn

இதனையடுத்து, மேலும் அதிர்ச்சி தரும் விதமாக பிரவீனின் காதல் மனைவி ஷர்மிளாவும் உயிரிழந்துள்ளார். காதல் கணவன் கொலை செய்யப்பட்டதால் ஷர்மிளா மன உளைச்சலில் இருந்த நிலையில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக மீட்கப்பட்டு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் கடந்த 9 நாட்களாக கோமா நிலையில் சிகிச்சை பெற்றுவந்த ஷர்மிளா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் தன்னுடைய காதல் கணவன் கொல்லப்பட்டது குறித்தும், தன்னுடைய தற்கொலை முடிவு குறித்தும் ஷர்மிளா கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். அதில், 'அவன் இல்லாத லைஃப் எனக்கு வேண்டாம். நானும் அவன் கூடவே போறேன்' என உருக்கமாக எழுதியுள்ளதோடு கொலைக்கு காரணமானவர்களின் பெயர்களையும் ஷர்மிளா குறிப்பிட்டுள்ளார்.

ஆணவக் கொலை செய்யப்பட்டு இளைஞர் உயிரிழந்த சம்பவத்தில் காதலியும் தற்கொலை செய்துகொண்டது அங்கு பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Next Story

சல்மான் கான் வீட்டின் முன் துப்பாக்கிச்சூடு; மும்பை போலீசார் அதிரடி!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
incident front of Salman Khan house Mumbai police in action

பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருப்பவர் சல்மான்கான். இவர் மும்பை பாந்த்ரா நகரில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இந்த இத்தகைய சூழலில் நேற்று முன்தினம் (14.04.2024) இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் சல்மான்கான் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதன் பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். துப்பாக்கிச்சூடு நடந்த போது சல்மான் கான் வீட்டில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டுத் தப்பிச்சென்ற மர்ம நபர்களைத் தேடி வந்தனர். சல்மான் கானுக்கு ஒய் பிளஸ் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்ட நிலையில், அவர் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்ற மர்ம நபர்களை தீவிரமாகத் தேடி வந்தனர்.

இந்நிலையில், நடிகர் சல்மான்கான் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடத்திய விவகாரத்தில் விக்கி குப்தா மற்றும் சாகர் பால் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குஜராத் மாநிலத்தின் பூஜ் பகுதியில் தலைமறைவாக இருந்த குற்றவாளிகளை மும்பை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இது குறித்து பூஜ் சார்பில் காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ஏப்ரல் 14 ஆம் தேதி நடிகர் சல்மான் கானின் வீட்டுக்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடத்திய லாரன்ஸ் பிஷ்னாய் கும்பலில் குற்றம் சாட்டப்பட்ட இருவரை மேற்கு கச்சச் போலீஸார் கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்ட இருவரும் பீகாரைச் சேர்ந்த விக்கி குப்தா (வயது 24), சாகர் பால் (வயது 21) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.