/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th_49.jpg)
திருவிதாங்கூா் சமஸ்தானத்தோடு இருந்த கன்னியாகுமரி மாவட்டம் தாய் தமிழகத்தோடு இணைக்க வேண்டி திருவிதாங்கூா் தமிழ்நாடு காங்கிரஸ் என்ற அமைப்பு 1945-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதனை தொடா்ந்து பல போராட்டங்கள் அதன் தலைவா்களால் நடத்தப்பட்டது. ஆனால் திருவிதாங்கூா் சமஸ்தானம் நிர்வாகம் அதனை கண்டு கொள்ளவில்லை. மேலும் 144 தடை உத்தரவு போடப்பட்டது அதனையும் மீறி போராட்டங்கள் வீறு கொண்டு எழுந்தன. இதில் புதுக்கடை, நட்டாலம், மார்த்தாண்டம் பகுதயில் நடந்த துப்பாக்கி சூட்டில் 11 போ் உயிரிழந்தனா். போராட்டகாரா்கள் மீதுள்ள அத்தனை வழக்ககளும் மார்ஷல் நேசமணி உயா்நீதிமன்றத்தில் வாதாடி வெற்றி கண்டார். இந்த நிலையில் 1948-ம் ஆண்டு நடந்த பொதுத்தோ்தலில் திருலிதாங்ககூா் காங்கிரஸ் அமைப்பு 18 இடங்களில் போட்டியிட்டு 14 இடங்களில் வெற்றி பெற்றது.தொடா்ந்து 1954-ல் குமரி மாவட்டத்தை தாய் தமிழகத்துடன் இணைக்க போராட்டம் தீவிரமடைந்தது.
இதில் மார்ஷல் நேசமணி, ஏ.ஏ.ரசாக், சிதம்பரநாதன் நாடார் ஆகியோர் கைது செய்யபட்டனர். போராட்டம் தொடா்ந்து தொடா்ந்த வேளையில் பணிந்த திருவிதாங்கூா் சமஸ்தானம் அகஸ்தீஸ்வரம், தோவாளை, கல்குளம், விளவங்கோடு மற்றும் செங்கோட்டை தாலுகாகளை தமிழகத்துடன் இணைக்க முன்வந்தது.
அதன் அடிப்படையில் திருவிதாங்கூா் சமஸ்தானம் 1956 நவம்பா் 1-ம் தேதி அந்த தாலுக்காக்களோடு சோ்ந்து குமரி மாவட்டத்தை தாய் தமிழகத்தோடு இணைத்தது. அந்த நாளை ஆண்டுத்தோறும் தமிழக அரசு சார்பில் குமரி மாவட்டம் பிறந்த நாளாக கொண்டாடப்படுகிறது. அப்போது இதற்காக போராடிய மார்ஷல் நேசமணிக்கு ஆண்டுத்தோறும்அரசு சார்பில் மரியாதை செலுத்தப்படுகிறது. நாகா்கோவில் வேப்பமூடு சந்திப்பில் அரசு சார்பில் கட்டப்பட்டுள்ள நேசமணியின் மணிமண்டபத்தில் உள்ள அவரின் சிலைக்கு அரசு மற்றும் அரசியல் கட்சிகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனா்.
1-ம் தேதி குமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இணைந்து (64) ஆண்டுகள் ஆகிறது. இதைத்தொடா்ந்து இன்று மார்ஷல் நேசமணியின் சிலைக்கு தமிழக அரசு சார்பில் செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சா் கடம்பூா் ராஜ், தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி தளவாய்சுந்தரம், மற்றும் மாவட்ட ஆட்சியா் அரவிந்தன், மாவட்ட எஸ்பி பத்ரி நாராயணன் ஆகியோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினார்கள்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)