Advertisment

80 பெண்கள்; 200 வீடியோக்கள்; புனித உடையில் நடமாடிய சாத்தான்!

kanyakumari church priest benedict anto arrested

Advertisment

கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு பகுதிக்கு உட்பட்ட கொல்லங்கோடு சூழால் பாத்திமா நகரைச் சோ்ந்தவா் 29 வயதான பெனிட்டிக் ஆன்டோ. +2 படிப்பை முடித்த இவர்.தத்துவயியல் மற்றும் இறையியல் தொடர்பான படிப்புகளை 7 ஆண்டுகள் படித்துள்ளார். பின்னர், திருத்தொண்டா் பட்டம் பெற்று மலங்கரை கத்தோலிக்க பேராலயத்துக்குட்பட்ட பேச்சிப்பாறை ஜீரோ பாயின்ட்டில் உள்ள சா்ச்சில்பயிற்சி பாதிாியராக சோ்ந்துள்ளார். அதன் பிறகு 2022-ல் அழகிய மண்டபம் பிலாங்கலை புனித விண்ணேற்பு அன்னை திருத்தலத்தில் பாதிாியராக சோ்ந்துள்ளார். நுனி நாக்கில் ஆங்கிலம், மலையாளம், தமிழ் என சரளமாக பல மொழிகளில் பேசக்கூடிய பாதிாியாா் பெனிட்டிக் ஆன்டோ இறைப்பணியில் சோ்ந்த சில நாட்களிலேயே சர்ச்க்கு வரும் பெண்களிடம், நெருங்கிப் பழகி தன்னுடைய வலையில் வீழ்த்தத் தொடங்கியுள்ளார்.

இவருடைய பேச்சில் மயங்கிய பெண்கள், கடவுளுக்கு சேவை செய்யும் உயர்ந்த இடத்தில் இருக்கும் பாதிாியாா் ஒருவர்.,இவ்வளவு சகஜமாக நெருங்கிப் பழகுகிறாரே என வியந்து, பாதிாியாரை இறைவனுக்கு சமமாக உணரத் தொடங்கியுள்ளனர். இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட பாதிாியாா், திருமணமான பெண்களையும், இளம் பெண்களையும், தனது இனிப்பான பேச்சால் இழுத்துள்ளார். அப்படி சிக்கிய பெண்கள் ஓன்றல்ல இரண்டல்ல.. எண்ணிக்கை சுமாா் 80ஐதாண்டுகிறது. பெண்களிடம் முதலில் அன்பாக பேசும் பாதிரியார்.,அவர்களின் வாட்சப் நம்பரை கேட்டு தெரிந்து கொள்கிறார். பின்னர், அவர்களிடம் மெதுவாக பேச்சுக் கொடுக்கிறார். குட் மார்னிங்.. குட் நைட்.. என தொடங்க, தப்பித் தவறிதெரியாமல் ஏதாவது ஒரு பெண் ரிப்ளை செய்துவிட்டால் போதும், உடனே பேச்சுவார்த்தையை வளர்க்கும் பாதிரியார், டபுள் மீனிங்கில் அவரது இச்சைக்கு இணங்குகிறார்களா என பார்க்கிறார். சில பெண்கள் ஃபாதர் நீங்களே இப்படி பேசலாமா? என அதிர்ச்சி தெரிவிக்க.. அதெல்லாம் சர்ச்சுல தான்.. இங்க நான் ஃபாதர் இல்ல உன்னோட லவ்வர் என அவர்களை மசிய வைக்கிறார்.

இப்படி பேசத் தொடங்கும் பெண்களிடம் எல்லாம், இரண்டு ஆப்ஷன்களை கொடுக்கிறார். வீடியோ காலா? நேரிலா? இது இரண்டும்தான் அந்த ஆப்ஷன். இரண்டில் எது வசதி எனக் கேட்கிறார். அதற்கு அந்த பெண்கள் எந்த பதில் சொன்னாலும், கெஞ்சிக் கூத்தாடியாவது ஒப்புக்கொள்ள வைக்கிறார். பின்னர், வீடியோ கால் வரச் சொல்லி, தான் விருப்பப்பட்டதைப் போல செய்ய வைக்கிறார். அவை அனைத்தையும் ஸ்க்ரீன்ஷாட்டுகளாக எடுத்து வைத்துக்கொள்கிறார். பின்னர், வீடியோவாகவும் பதிவு செய்துகொள்கிறார். இது அந்த பெண்களுக்கு தெரியாது எனக் கூறப்படுகிறது. இதுபோல பல பெண்களுடன் பழகி200க்கும் மேற்பட்ட வீடியோக்களும் புகைப்படங்களும் தன்னுடைய ஸ்மாா்ட் போன் மற்றும் லேப்டாப்பில் பதிவுசெய்து வைத்துள்ளாா்.

Advertisment

இந்நிலையில் காட்டாத்துறை அருகே பிலாவிளை பகுதியைச் சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவரான ஆஸ்டின் ஜியோ என்பவர், பாதிரியாரின் லீலைகள் என்ற பெயரில்கடந்த சில நாட்களாகஅவர் இளம் பெண்களுக்கு அனுப்பிய ஆபாச படங்களை சமூக ஊடகங்களில் பதிவு செய்தார். இதை அறிந்த பாதிரியார் பெனடிக்ட் ஆன்டோவுக்கும் மாணவன் ஆஸ்டின் ஜியோவுக்கம் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்தபாதிரியார் பெனிடிக் ஆன்டோ, கொல்லங்கோடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், ஆஸ்டின் ஜியோ தன்னை மிரட்டி பணம் கேட்பதாகவும் பெண்களுடன் உல்லாசமாக இருப்பது போன்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக ஊடகங்களில் பரப்பி வருவதாகவும் கூறியிருந்தார். முழுதாக விசாரிக்காத போலீசார், பாதிரியார் அளித்த புகாரின் பேரில்மாணவர் ஆஸ்டின் ஜியோவை கைது செய்து சிறையில் அடைத்தனர். முன்னதாக பாதிரியாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சட்டக்கல்லூரி மாணவர் பாதிரியாரின் லேப்டாப்பை எடுத்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. அதில்தான், அவர் சந்தேகப்பட்டது போல பல பெண்களின் வீடியோக்கள் இருந்துள்ளது.

இந்த நிலையில்தான், பாதிரியாரால் சிறைக்கு அனுப்பப்பட்டகாட்டத்துறை ஆலந்தட்டுவிளையை சோ்ந்த சட்டக்கல்லூாி மாணவரின் தாயாா் மினி அஜிதா, காவல் கண்காணிப்பாளரை சந்தித்து, பாதிரியாாின் லீலைகள் குறித்து புகாா் கொடுத்தார். அந்த புகாருடன்பாதிரியாருக்கு எதிராக, ஏராளமான பெண்களிடம் ஆபாச சாட்டிங், முக்கிய ஆவணங்கள், தடயங்கள், புகைப்படங்கள், வீடியோக்கள் போன்றவற்றைச் சமர்ப்பித்தார். இதற்கிடையேகடந்த 11 ஆம் தேதிஆலந்தட்டுவிளையைச் சேர்ந்த பெண் ஒருவர்பாதிரியார் பெனடிக்ட் ஆன்டோ, இளம்பெண்களுக்கும் மாணவிகளுக்கும் பாலியல் தொல்லை கொடுத்ததாக அவர் மீது போலீசில் புகார் அளித்தார். அதேபோல, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, பேச்சிப்பாறை பகுதியைச் சேர்ந்த நர்சிங் மாணவி ஒருவர் குமரி போலீஸ் சூப்பிரெண்டிடம் புகார் அளித்தார். இதனடிப்படையில், பாதிரியார் பெனிடிக் ஆன்டோ மீது நாகர்கோவில் சைபர் கிரைம் போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து தலைமறைவான பாதிரியார் பெனிடிக் ஆன்டோவை இன்று போலீசார் கைது செய்துள்ளனர்.

arrested police kanniyakumari
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe