kanyakumari chennai express trichy nearest lorry tyre incident 

Advertisment

கன்னியாகுமரியில் இருந்து சென்னை நோக்கிச்சென்ற விரைவு ரயில் வழக்கமாக நள்ளிரவு 12.30 மணிக்கு திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்திற்கு வந்து சேரும். அதன்படி இன்று நள்ளிரவு திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்திற்கு வந்து சேர்ந்த கன்னியாகுமரி விரைவு ரயில் 20 நிமிடங்களுக்கு மேல் தாமதமாகச் சென்றுள்ளது.

இது குறித்து அதிகாரிகள் விசாரணை செய்ததில் திருச்சி ஸ்ரீரங்கம் நிறுத்தம் தாண்டி லால்குடி நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது வாளாடி அருகே ரயில்வே தண்டவாளத்தில் மர்ம நபர்கள் லாரி டயரை வைத்துள்ளனர். மற்றொரு டயரை ரயில் கடந்து செல்லும் போது மர்ம நபர்கள் குறுக்கே உருட்டி உள்ளனர்.

இதனால் கன்னியாகுமரி விரைவு ரயிலின் அடிப்பகுதியில் உள்ள பிரேக் இன்ஜின், மின் சாதன பெட்டி ஆகியவற்றில் மோதி சேதம் ஏற்படுத்தியதால் நான்கு பெட்டிகளுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. தற்பொழுது திருச்சி ரயில்வே காவல்துறை துணை கண்காணிப்பாளர் பிரபாகரன் தலைமையில் அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நள்ளிரவில் யார் அந்த லாரி டயரை வைத்தது என்பது குறித்தும் அதற்கான தடயங்களையும் சேகரித்து வருகின்றனர்.