Advertisment

காதலி சொன்ன அந்த வார்த்தை... காதலன் எடுத்த முடிவு... குமரி அருகே பரபரப்பு...

பள்ளியில் ஏற்பட்ட நட்பு பின்னர் காதலாக மாறி அது கல்லூரி வரை சென்றது. பின்னர் பெற்றோர் கூறியதால் காதலனிடம் தன்னை மறந்துவிடு என்று சொன்னதற்காக காதலன் எடுத்த முடிவால் குமரி அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

Kanyakumari

குமரி கேரளா எல்லையான பாறசாலையை அடுத்த காரகோணத்தை சோ்ந்த அனு (19), ஆஷிகா (19) இருவரும் பள்ளியில் படிக்கும் போதே காதலித்து வந்தனா். பள்ளிபடிப்பை முடித்ததும் ஆஷிகா அங்குள்ள கல்லூரி ஓன்றில் பேஷன் டிசையினிங் படித்து வந்தார். அனு மேற்கொண்டு படிக்காமல் ஆட்டோ ஓட்டி வந்தார். இந்த நிலையில் இவா்களுடைய காதலும் நீடித்து வந்தது. ஆஷிகாவும் கல்லூரி படிப்புக்காக அனு அடிக்கடி இயன்ற அளவு பண உதவியும் செய்து வந்துள்ளார்.

Advertisment

இந்த நிலையில் இரண்டாம் ஆண்டு கல்லூரிக்கு சென்ற ஆஷிகா அனுவுடன் பேசுவதை குறைத்து கொண்டார். இது அனுவுக்கு மன ரீதியாக வேதனையை கொடுத்ததால் கல்லூரிக்கு சென்று ஆஷகாவிடம் அனு கேட்டதற்கு பெற்றோர்கள் தன்னை கண்டித்ததாகவும் இனி மேல் நாம் காதலர்களாக இருக்க வேண்டாம் தன்னை மறந்து விடு என்று ஆஷிகா கூறியுள்ளார்.

ஆனால் அனு ஆஷிகாவை மறக்க முடியாமல் அவளை பின் தொடா்ந்து மறந்து விடாதே என கெஞ்சியிருக்கிறார். இதை ஆஷிகா பெற்றோரிடம் சொல்லி வெள்ளரடை போலிசில் புகார் கொடுத்தனா். போலிசார் அனுவை அழைத்து எச்சரித்ததால் அனு கடந்த சில மாதங்களாக ஆஷிகாவை பார்ப்பதை நிறுத்தி விட்டார்.

இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன் காரகோணத்தில் உள்ள கடைக்கு ஆஷிகா தனது உறவுகார பையன் ஒருவனுடன் பைக்கில் வந்தியிருக்கிறார். இதை பார்த்த அனுவுக்கு சங்கடமும் ஆத்திரமும் ஏற்பட்டது. உடனே அனு, ஆஷிகாவிடம் தகராறு செய்துள்ளார். இருந்தும் அவனுடைய மனசுக்கு நிம்மதியை கொடுக்கவில்லை.

இதனால் அனு இடுப்பில் கத்தியை மறைத்து வைத்து கொண்டு ஆஷிகாவின் வீட்டுக்கு சென்றான். அங்கு தாத்தா பாட்டியுடன் இருந்த ஆஷிகா, அனுவை கண்டதும் அதிர்ச்சியுடன் எழுந்து நின்றாள். உடனே அனு மறைத்து வைத்தியிருந்த கத்தியை எடுத்து ஆஷிகாவின் கழுத்தை அறுத்து கொலை செய்தான். பின்னா் அதே கத்தியால் தன்னுடைய கழுத்தையும் அறுத்து அதே இடத்தில் தற்கொலை செய்து கொண்டான். காதலியை கொலை செய்து, காதலனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குமரி எல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

decision boyfriend Kanyakumari
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe