Advertisment

’பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தை நான் கண்டுக்கல, எனக்கு எதுவும் தெரியாது’ - அதிரவைத்த பாஜக இல.கணேசன்

வேலூர் மாவட்டம் வாலாஜாப்பேட்டை அடுத்த கீழ்ப்புதுபேட்டையில் உள்ள தன்வந்திரி ஆலயத்தில் நடைபெற்ற ஆன்மீக நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள பாஜக மூத்த தலைவரான இல.கணேசன் சிறப்பு விருந்தினராக வந்து கலந்துக்கொண்டார்.

Advertisment

g

நிகழ்ச்சி முடிந்தபின் செய்தியாளர்களை சந்தித்தபோது, ராகுல் காந்தி வருகை என்பது தமிழகத்தில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது.மாற்றம் என்று ஏற்படுமானல் ராகுல்காந்தி எங்கெல்லாம் பிரச்சாரம் செய்கிறாரோ அங்கெல்லாம் மக்கள் பிரதமர் நரேந்திரமோடிக்கு ஆதரவான மனநிலைக்கு மாறுகின்றனர், ராகுல் காந்தி தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்வது என்பது பாஜக வெற்றிக்கு வழிவகுக்கும் என்றார். தொடர்ந்து, கடந்த முறை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அனைத்து கட்சிகளையும் ஒன்று சேர்ந்து அமைக்கப்பட்ட இந்த கூட்டணியானது தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது. கடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்குறுதிகளை சொல்லி கேட்டோம் தற்போது 5 ஆண்டுகால ஆட்சியில் அடைந்துள்ள வளர்ச்சியை சொல்லி வாக்கு கேட்போம் என்றார்.

பொள்ளாச்சி பாலியல் விவகாரம் குறித்த கேள்விக்கு, அதுப்பற்றிய விவரம் எனக்கு தெரியாது, நான் அப்படிப்பட்ட செய்திகளை அதிகமாக படிப்பதில்லை, தெரியாத விஷயம் தொடர்பாக நான் பேசுவதில்லை எனச்சொன்னது, அவரை சுற்றியிருந்த தொண்டர்களை அதிர்ச்சியடைய வைத்தது.

Advertisment

தமிழகம் மட்டுமல்லாமல், இந்தியாவையே உளுக்கியுள்ள பொள்ளாச்சி பாலியல் விவகாரம் மீடியாக்கள் மூலம் வெளிவந்து மக்கள் கொதித்துப்போய் சாலைக்கு வந்து இதில் ஈடுப்பட்டவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என போராடிக்கொண்டுள்ள நிலையில் மத்தியில் ஆளும் கட்சியான பாஜகவை சேர்ந்த, தமிழகத்தில் மூத்த தலைவராக மதிக்கப்படுபவர் எனக்கு அதுப்பற்றி எதுவும் தெரியாது எனச்சொல்லியது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இது தொடர்பாக நம்மிடம் பேசிய சில பாஜகவினர், இந்த பொள்ளாச்சி பெண்கள் பலரின் வாழ்க்கையில் விளையாடியது, அதிமுக பிரமுகர்கள், அவர்களின் பிள்ளைகள் என்பது தெரியவந்துள்ளது. தற்போது அதிமுக கூட்டணியில் பாஜக உள்ளதால் இதுப்பற்றி கருத்து சொல்ல தயங்குகிறார் தலைவர் என்றார்கள்.

ganesan pollchi Kanyakumari
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe