காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோவில் அத்திவரதர் உற்சவம் 46 நாட்களை கடந்து இன்று 47 வது நாளாக நடைபெற்று வருகிறது. முதல் 31 நாட்கள் சயன கோலத்தில் காட்சியளித்த அத்திவரதர் இந்த மாதம் 1-ந் தேதி முதல் நின்ற கோலத்தில் காட்சியளித்து வருகிறார்.

Advertisment

kanjipuram athivararathar dharshnam

அத்திவரதரை இதுவரை சுமார் 1 கோடி பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். கடைசி நாளானஇன்று மட்டுமே அத்திவரதரை தரிசனம் செய்யலாம் என்ற நிலையில் நேற்றேசுதந்திர நாள் என்பதால்விடுமுறை காரணமாக சுமார் 6 லட்சம் பக்தர்கள் காஞ்சியில் குவிந்தனர்.

இந்த வைபவம் இன்றுடன் முடியுவடையும் நிலையில்கூட்ட நெரிசலை தவிர்க்க இன்று நள்ளிரவு 12 அல்லது அதிகாலை 4 மணிவரைமட்டுமே பொது தரிசனமும் அனுமதிக்கப்படும். வரும் ஆகஸ்ட் 17 ஆம் தேதி அதாவது நாளைவரதராஜபெருமாள் கோவில் ஆகம விதிகளின் படி அத்திவரதர்அனந்தசரஸ் குளத்தில் வெள்ளிப்பெட்டியில் வைக்கப்பட இருக்கிறார். இதன் பின்னர் 40 ஆண்டுகள் கழித்து 2059ல் தான் அத்திவரதரை தரிசிக்க முடியும்.

Advertisment

இன்று காலை முதல்தற்போதை நிலவரப்படி ஒரு லட்சம் பேர் அத்திவரதரை தரிசித்துள்ளனர். இரண்டு லட்சம் பேர் வரிசையில் காத்துக்கொண்டிருக்கின்றனர்.