திமுக தலைவர் கலைஞர் நேற்று முன்தினம் காலமானார். அதனைத் தொடர்ந்து அவரது உடல் நேற்று காலை முதல் ராஜாஜி அரங்கில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் படைசூழ அவரின் உடல் இறுதி ஊர்வலமாக அண்ணா நினைவிடம் கொண்டு செல்லப்பட்டு, 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் கலைஞரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில் மாநிலம் முழுவதும் பல இடங்களில் பொதுமக்கள் கட்சி தொண்டர்கள் சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுவருகிறது. அதனை தொடர்ந்து இன்றும் முன்னாள் முதல்வரும், முத்தபத்திரிகை சக்கரவர்த்தியான முத்தமிறிஞர் கலைஞர் அவர்கள் மறைவுக்கு இரங்கல் அனுசரிக்கப்பட்டது.காஞ்சிபுரம் மாவட்ட பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் இன்று மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது இதில் ஏராளமான பத்திரிகையாளர்கள் கலந்துக்கொண்டு அஞ்சலி செலுத்தினர்.