Advertisment

தமிழகத்தை பரபரப்பாக்கிய பள்ளி கலவரம்; 615 பேருக்கு சம்மன்

Kaniyamoor school riot incident; 615 people summoned

கனியாமூரில் தனியார்ப் பள்ளி சூறையாடப்பட்ட சம்பவத்தில் 600 க்கும் மேற்பட்டோருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

Advertisment

கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை 13- ஆம் தேதி அன்று கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் பகுதியில் 12- ஆம் வகுப்பு படித்து வந்த ஸ்ரீமதி என்ற மாணவி தனியார் பள்ளி விடுதியின்மாடியில் இருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்தை கண்டித்து நடந்த போராட்டத்தில் கலவரம் வெடித்தது. நடந்த கலவரம் தொடர்பாக, 300க்கும் மேற்பட்டவர்கள் பேர் கைது செய்யப்பட்டனர். மாணவியின் உயிரிழப்பும் அதனைத் தொடர்ந்து நடைபெற்ற கலவரமும் தமிழகம் முழுவதும் அன்றைய நேரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

Advertisment

இந்த வழக்கை சிறப்புப் புலனாய்வுக் குழு தற்போது வரை விசாரித்து வரும் நிலையில், பள்ளி சூறையாடல் வழக்கில் 615 பேர் ஒரே நேரத்தில் ஆஜராக சிறப்புப் புலனாய்வுக் குழு சம்மன் அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

kallakurichi police private school
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe