Advertisment

புகாருக்குள்ளான விஏஓ பணியிடமாற்றம்;  விடுப்பு எடுத்த விஏஓக்கள்

kaniyakumar vao incident vao take leave 

Advertisment

குமாி மாவட்டத்தில் நாகர்கோவில் மற்றும் பத்மநாபபுரம் வருவாய் கோட்டங்களின் கீழ் அகஸ்தீஸ்வரம், கல்குளம், தோவாளை, விளவங்கோடு, திருவட்டாா், கிள்ளியூா் என 6 தாலுகா அலுவலகங்கள் செயல்படுகின்றன. இந்த தாலுகா அலுவலகங்களின் கீழ் 188 கிராம நிா்வாக அலுவலா்கள் பணிபுாிந்து வருகின்றனா். இந்த நிலையில் கடந்த மாதம் பத்மநாபபுரம் சார் ஆட்சியராக இருந்த அலமேற்மங்கை கீழ்குளம் கிராம நிா்வாக அலுவலா் ராஜேஷ் மீது அந்த பகுதி மக்களிடம் இருந்து ஏராளமான புகாா்கள் வந்ததால் அவரை சூழால் கிராம நிர்வாக அலுவலராக அதிரடியாக மாற்றினார். இது மற்ற கிராம நிா்வாக அலுவலர்களிடம்அதிருப்தியை ஏற்படுத்தியது.

இதை தொடர்ந்து குமரி மாவட்ட கிராம நிா்வாக அலுவலா் சங்கத்தினா் சாா் ஆட்சியா் அலமேற்மங்கையிடம் கிராம நிா்வாக அலுவலா் ராஜேஷின் இடமாற்றஉத்தரவை திரும்ப பெற வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர் ஆனால் அவர் நடவடிக்கை எடுத்தது எடுத்தது தான் அந்த உத்தரவை திரும்ப பெற முடியாது என்று கூறி விட்டார். மேலும் சாா் ஆட்சியா் அலமேற்மங்கை சென்னைக்கு மாற்றலாகி சென்றதையடுத்து புதிய சார் ஆட்சியராக கௌசிக் பதவியேற்றாா்.

இந்த நிலையில் பொது மக்களிடம் இருந்து வந்த புகாரை வைத்து கிராம நிா்வாக அலுவலா் ராஜேஷ் மீது நடவடிக்கை எடுத்தது தவறு. ஆனால் வருவாய் ஆய்வாளர் மற்றும் தாசில்தார் இடமிருந்து கிராம நிா்வாக அலுவலர் மீது நடவடிக்கை எடுத்து பரிந்துரை கடிதம் எதுவும் அனுப்பவில்லை. பொதுமக்கள் கொடுத்த தவறான புகாாின் மீது தான் நடவடிக்கை எடுத்து இருக்கிறார்கள் அதை ரத்து செய்ய வேண்டுமென்று சாா் ஆட்சியா் கௌசிக்கிடம் கிராம நிா்வாக அலுவலா்கள் மனு கொடுத்தனர். அவர் அதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காததால் அனைத்து கிராம நிா்வாக அலுவலா்களும் விடுப்பு எடுத்து கொண்டு தொடர்ந்து 3 வது நாட்களாக சாா் ஆட்சியா் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்படவில்லை.

Advertisment

இதற்கிடையில் வார தொடக்கத்தில் இருந்து 3 நாட்களாக தொடர்ந்து கிராம நிா்வாக அலுவலா்கள் அலுவலகத்தில் இல்லாததால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். தினமும் ஏராளமான மக்கள் ஜாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், வாரிசு சான்றிதழ், பட்டா போன்ற சான்றிதழ்கள் பதிவு செய்து விட்டு அதை பெற முடியாமல் அலுவலகங்களில் காத்துக் கிடக்கிறார்கள். எனவே கிராம நிா்வாக அலுவலா்கள் போராட்டத்தை கைவிட்டு உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Kanyakumari rdo VAO
இதையும் படியுங்கள்
Subscribe