Advertisment

உயர்கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு அமல்படுத்தப்படுகிறதா? -மாநிலங்களவையில் கனிமொழி கேள்வி

Kanimozhi

Advertisment

மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களிலுள்ள ஆசிரியர் பணியிடங்களில் இடஒதுக்கீட்டின் சதவீதம் குறைந்திருப்பது குறித்து நாடாளுமன்றத்தில் பேசிய திமுக எம்.பி.க்களின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி,

"மத்திய அரசு உயர்கல்வி நிறுவனங்களில் முஸ்லீம்கள் மற்றும் எஸ்.சி, எஸ்.டி. பிரிவினருக்கான இடஒதுக்கீட்டின் சதவீதம் அவர்களின் மக்கள் தொகையோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது மிகவும் குறைந்திருப்பதாக அகில இந்திய உயர்கல்வித்துறை ஆய்வில் தெரியவந்துள்ளது. இது மத்திய அரசுக்குத் தெரியுமா? தெரிந்திருந்தால் அது குறித்து நடவடிக்கை எடுத்துள்ளீர்களா? மத்திய உயர்கல்வித் துறையில் அவர்களுக்கான பிரதிநிதித்துவத்தை பூர்த்தி செய்துள்ளதா, மத்திய அரசு?" என அடுக்கடுக்காக பல கேள்விகளை முன் வைத்து குரல் எழுப்பினார்.

Satyapal_Singh

Advertisment

இதற்கு பதிலளித்துப் பேசிய மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் சத்யபால்சிங், "கடந்த 2016-17 ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட அனைத்திந்திய உயர்கல்வித்துறை ஆய்வின்படி, முஸ்லீம்கள் 4.9 சதவீதமும், எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினர் முறையே 8.3 மற்றும் 2.9 சதவீதமும் ஆசிரியர் பணியிடங்களில் இருக்கின்றனர். அதேவேளை, 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி முஸ்லீம்கள், எஸ்.சி, எஸ்.டி. வகுப்பினரின் மக்கள் தொகை முறையே 14.2 , 16.2, 8.2 சதவீதம் இருக்கின்றது. மதரீதியிலான இட ஒதுக்கீடு இல்லை என்பதால் முஸ்லீம்கள் சிலர் ஓ.பி.சி.பட்டியலுக்குள் வருகின்றனர். இருப்பினும் ஆசிரியர், ஆசிரியரல்லாத பணியிடங்களை நிரப்புகையில் முஸ்லீம்கள் மற்றும் எஸ்.சி., எஸ்.டி.பிரிவினருக்கான இடஒதுக்கீட்டின் சதவீதத்தை உறுதிப்படுத்த வேண்டும் என மத்திய உயர்கல்வி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகின்றன " என்று விளக்கமளித்திருக்கிறார்.

kanimozhi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe