Advertisment

தமிழகம் முழுவதும் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவிவரும் சூழலில், தமிழக அரசு அதனை சரிசெய்யவும், மக்களுக்கு தேவையான நீரை வழங்கவும் முறையான நடவடிக்கைகள் எடுக்கவில்லை என, சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று (29.06.2019) சென்னையில் உள்ள பாரிமுனை பகுதியில் தண்ணீர் பஞ்சத்தை போக்க நடவடிக்கை எடுக்காத தமிழக அரசை கண்டித்து திமுக சார்பில், கனிமொழி MP மற்றும் தயாநிதி மாறன் MP ஆகியோரின் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் பொதுமக்கள் தவித்த வாய்க்கு தண்ணீர் இல்லை என்பது போன்ற வாசகங்கள் எழுதிய காலி குடங்களுடன் அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.