Kanimozhi MP says this is Unacceptable activities under any circumstances

திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வருபவர் வருண்குமார். இவரது மனைவி வந்திதா பாண்டே. இவர் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார். இத்தகைய சூழலில் தான் சிலர் இவர்கள் இருவர் குறித்தும், இவர்களது குடும்பத்தினர் குறித்தும் சிலர் சமூக வலைதளங்களில் தொடர்ந்து அவதூறு பரப்பி வருகின்றனர். இதுதொடர்பாக திருச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் 51 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களில் ஏற்கனவே 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Advertisment

இதனையடுத்து இந்த வழக்கில் தொடர்புடைய மதுரை மாவட்டம் விஸ்வநாதபுரம் தபால் தந்தி நகரை சேர்ந்த அப்துல் ரகுமான் (வயது 22), கள்ளக்குறிச்சி மாவட்டம் களமருதூர் தெற்கு தெருவை சேர்ந்த சண்முகம் (வயது 34) ஆகியோரை தில்லைநகர் போலீசார் கைது செய்து திருச்சி மத்தியச் சிறையில் அடைத்தனர். இதற்கிடையே அருண்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்து அவதூறாக பேசியதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisment

Kanimozhi MP says this is Unacceptable activities under any circumstances

இந்நிலையில் இது தொடர்பாக திமுக துணைப் பொதுச்செயலாளரும், தூத்துகுடி நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமான கனிமொழி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பெண்கள் எந்த துறையில் இருந்தாலும், எவ்வளவு உயரத்தில் பறந்தாலும், அவர்கள் சார்ந்த ஆணை இழிவு செய்யும் வண்ணம், அந்த பெண்களை ஆபாசமாக இழிவுபடுத்துவதும், அறுவெறுக்கத்தக்க முறையில் பிரச்சாரம் செய்வதும் எந்த சூழலிலும் ஏற்றுக்கொள்ளமுடியாத இழிச்செயல்.

புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே மற்றும் அவரது குடும்பத்தினர் மீது இணையவழி ஆபாச தாக்குதல் நடத்தி வரும் அனைவர் மீதும் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஒரு சக பெண்ணாகவும், சமூக அக்கறை உள்ள நபராகவும் வந்திதா பாண்டேவின் கரம்பற்றி எனது ஆதரவையும், அன்பையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Advertisment