




புதுச்சேரியில் மறைந்த எழுத்தாளர் கி.ரா என்று அழைக்கப்படும் கி. ராஜநாராயணன் அவர்களின் உடல், அவரது சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள இடைச்செவல் கிராமத்திற்கு நேற்று (18/05/2021) மாலை கொண்டுவரப்பட்டது. இதனையடுத்து, திமுக மகளிரணிச் செயலாளரும், தூத்துக்குடி திமுக நாடாளுமன்றக் குழு துணைத் தலைவருமான கனிமொழி எம்.பி., நேரில் சென்று அஞ்சலி செலுத்தி, அவர்களின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார். கி.ரா அவர்களின் இறுதி சடங்கு இன்று (19/05/2021) நடைபெற இருக்கிறது.
அவருடன் சமூகநலன் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட மா.செ.வுமான கீதா ஜீவன் எம்.எல்.ஏ., தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, விளாத்திகுளம் எம்.எல்.ஏ. ஜி.வி. மார்கண்டேயன், கழக நிர்வாகிகள் ஆகியோர் அஞ்சலி செலுத்தினார்கள்.