Kanimozhi MP Birthday; Saree ready in Gujarat dmk women wing Ammu Andro

Advertisment

திமுக எம்.பி. கனிமொழியின் பிறந்தநாளை தமிழக முழுவதும் விமர்சையாகக் கொண்டாட மகளிர் அணியினர் திட்டமிட்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்ட மகளிர் அணி பிரமுகர் அம்மு ஆன்றோ என்பவர் வித்தியாசமான முறையில் கனிமொழியையும், திமுக மகளிர் அணியினரையும் கவர்ந்திருக்கிறார். அம்மு ஆன்றோவின் வித்தியாசமான வாழ்த்து திமுகவில் இப்போதே பரபரப்பாகியிருக்கிறது.

கனிமொழியின் பிறந்த நாள் ஜனவரி-5. அண்மைக்காலமாக அவரது பிறந்தநாளை திமுக மகளிர் அணியினர் பிரம்மாண்டமாகக் கொண்டாடி வருகிறார்கள். தற்போது கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக இருப்பதால் இந்த வருடம் அவரது பிறந்தநாளை மேலும் விமர்சையாகக் கொண்டாட்ட திட்டமிட்டுள்ளனர். அந்த வரிசையில், கனிமொழியின் தீவிர ஆதரவாளரும், கன்னியாகுமாரி மாவட்ட திமுக மகளிர் அணி பிரமுகருமான அம்மு ஆன்றோ, அறிவாலயத்தின் பின்னணியில் கனிமொழியின் உருவம் பொறித்த சேலையை வடிவமைத்திருக்கிறார். பிரத்தியேகமாக நெய்யப்பட்ட இந்த சேலை கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு குஜராத்தில் ஆர்டர் கொடுக்கப்பட்டது.

Kanimozhi MP Birthday; Saree ready in Gujarat dmk women wing Ammu Andro

Advertisment

சேலையின் முந்தானையில் கனிமொழியின் உருவம் மிக உயர்ந்த நூலினால் நெய்யப்பட்டிருக்கிறது. இந்தச் சேலையை, கனிமொழியின் பிறந்தநாளில் அவருக்கு பரிசளிக்கிறார் அம்மு ஆன்றோ. மேலும், 2,000 சேலைகளுக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. கனிமொழியின் பிறந்தநாளில் திமுக மகளிர் அணிக்கு வழங்கவும் அம்மு ஆன்றோ திட்டமிட்டுள்ளாராம்.

Kanimozhi MP Birthday; Saree ready in Gujarat dmk women wing Ammu Andro

கனிமொழியின் பிறந்தநாள் கொண்டாட்டங்களில் அவரது உருவம் பொறித்த சேலைகள் திமுகவில் இப்போதே பரபரப்பாகப் பேசப்படுகிறது.