அண்ணா அறிவாலயத்தில் கனிமொழிக்கு முக்கியத்துவம்;  தனியறை ஒதுக்கிய முதல்வர்!

Kanimozhi gets a separate room at Anna Arivalayam

சென்னை அண்ணா அறிவாலயத்தில் புதிதாக ஒதுக்கப்பட்டுள்ள அலுவலக அறையில் முதல்வர் ஸ்டாலின் கனிமொழி எம்.பி. யை அமர வைத்தார்.

திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு கொடுக்கப்பட்டது போன்று அக்கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் கனிமொழிக்கும் தனியறை ஒதுக்கப்பட்டுள்ளது. திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், நேற்று (23/06/2025) சென்னை, அண்ணா அறிவாலயத்தில், புதிதாக ஒதுக்கப்பட்டுள்ள அலுவலக அறையில், கனிமொழியை அமரவைத்தார்.

அப்போது குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், துணை பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, திமுக செய்தி தொடர்பு தலைவர் டி.கே.எஸ். இளங்கோவன், திமுக இணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலை, திமுக துணை அமைப்புச் செயலாளர் எஸ். ஆஸ்டின். தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் தலைவர் துறைமுகம் காஜா, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் தலைவர் புச்சி எஸ்.முருகன் ஆகியோர் உடனிருந்தனர்.

anna arivalayam kanimozhi mk stalin
இதையும் படியுங்கள்
Subscribe