Skip to main content

  ’நீங்கள் நினைத்தால் ஆட்சியை மாற்றி விடலாம்’ -முழங்கிய கனிமொழி

Published on 21/01/2019 | Edited on 21/01/2019
k

 

தமிழகம் முழுக்க, மக்களிடம் செல்வோம் அவர்களின் மொழி அறிவோம் என்ற திட்டத்தில் ஊராட்சிகள் தோறும் கிராம சபைக் கூட்டங்களை நடத்தி வருகிறது தி.மு.க.

 

தூத்துக்குடி மாவட்டத்தின் வடக்கு மாவட்டமான ஒட்டப்பிடாரம் தொகுதிக்குட்பட்ட பாஞ்சாலங்குறிச்சி புதியம்புத்தூர் உள்ளிட்ட ஊராட்சிகளின் கிராம சபைக் கூட்டத்தில் அதன் மா.செ.வும் எம்.எல்.ஏ.வுமான அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையேற்க, தி.மு.க.வி்ன் தொண்டர்கள் நிர்வாகிகள், கிராம மக்கள் திரண்டிருந்த கூட்டத்தில், பேசிய ராஜ்யசபா எம்.பி.யான கனிமொழி,

 

k2

 

கிராமங்கள் தோறும் சாலை வசதி, குடி தண்ணீர் திட்டம் போன்றவைகள் நிறைவேறாமல் போனதற்கு உள்ளாட்சித் தேர்தல் நடத்தாததே காரணம். மேலும் உள்ளாட்சி அமைப்புகளில் மக்கள் பிரதிநிதிகளும் இல்லாதது மற்றொரு காரணம். பட்டாசு ஆலைக்கு அறிவிக்கப்பட்ட தடையால் 8 லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

kani3

 

தமிழக அரசு பட்டாசு தொழிலாளர்களின் பிரச்சினையை மத்திய அரசு வரை கொண்டு சென்று தீர்வுகாண நடவடிக்கை எடுக்காதது, கண்டிக்கத் தக்கது. மத்திய, மாநில அரசுகள் கண்டு கொள்ளவில்லை. ஆட்சி மாற்றத்தால் தான் இவர்களுக்கு ஒரு நியாயம் கிடைக்கக் கூடிய சூழ்நிலை உருவாகும். இடைத் தேர்தல் நடத்தினால் தோற்று விடுவோம் என்பதால் தான் தேர்தலை நடத்த வில்லை. நீங்கள் நினைத்தால் ஆட்சியையே மாற்றி விடலாம்.

மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தாபானர்ஜி நடத்திய எதிர்க் கட்சித் தலைவர்கள் மாநாட்டில் திரண்ட கூட்டத்தைப் பார்க்கும் போது, பிரதமர் மோடி அடிக்கடி சொல்லக் கூடிய, நல்ல நாள் இந்தியாவிற்கு வந்து கொண்டிருக்கிறது. என்பதைக் காட்டுகிறது என்று பேசினார்.

 

சார்ந்த செய்திகள்