இயக்குநர் ஏ.எல். விஜய், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுத்துவருகிறார். ‘தலைவி’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில், ஜெயலலிதாவாக கங்கனா ரணாவத்தும் எம்.ஜி.ஆர். கதாபாத்திரத்தில் அரவிந்த் சாமியும் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவுபெற்றதையடுத்து, இறுதிகட்டப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுவருகின்றன.

Advertisment

இதையடுத்து ‘தலைவி’ படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதன்படி, ‘தலைவி’ திரைப்படம் வருகிற செப்டம்பர் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Advertisment

இதற்கான ப்ரோமோஷன் பணிகளுக்காக தற்போது சென்னை வந்துள்ள நடிகை கங்கனா ரனாவத், மெரினா கடற்கரையில் அமைந்துள்ள மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதாவின் நினைவிடத்திற்குச் சென்று மலர் வளையம் வைத்தார். பின்னர் எம்.ஜி.ஆர் நினைவிடத்திற்கும், கலைஞர் நினைவிடத்திற்கும் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.