Published on 29/08/2019 | Edited on 29/08/2019

பழனி செல்லும் முருகப் பக்தர்கள், பழனி கோவில் நிர்வாகத்தில் விற்பனை செய்யப்படும் பஞ்சாமிர்தத்தை வாங்கினாலும், அதைவிட கூடுதலாக கந்தவிலாஸ் மற்றும் சித்தநாதன் பஞ்சாமிர்த கடைகளில் பஞ்சாமிர்தம் மற்றும் விபூதிகளை வாங்குவார்கள். அந்த அளவுக்கு பஞ்சாமிர்தத்திற்கு புகழ் பெற்றது இந்த இரு கடைகளும்.
இந்த நிலையில் இன்று காலை இந்த இரண்டு கடைகளிலும் தலா 10க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வந்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெறுவதாக கூறப்படுகிறது.
இந்த இரு கடைகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்துவது பழனியில் உள்ள மற்ற கடைக்காரர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.