Kanchipurm college girl issue ramadoss condemn

காஞ்சிபுரம் அருகே கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது அதிர்ச்சியளிக்கிறது; குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும்” என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Advertisment

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “காஞ்சிபுரத்தையடுத்த குண்டுகுளம் என்ற இடத்தில் கல்லூரி மாணவி ஒருவர் அவரது காதலர் முன்னிலையில் 5 கொடியவர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. இது மனிதத்தன்மையற்ற மிருகத்தனமான செயலாகும். கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தவர்களின் அடையாளம் மாணவிக்குத்தெரியவில்லை என்றாலும், குற்றவாளிகள் தங்களுக்குள் அழைத்துக்கொண்ட பெயரை அடிப்படையாக வைத்து 5 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காவலர்களின் நடவடிக்கை பாராட்டத்தக்கது.

Advertisment

காஞ்சிபுரம், திருப்பெரும்புதூர் பகுதிகளில் கடந்த 3 ஆண்டுகளில் நிகழ்ந்துள்ள நான்காவது கூட்டுப் பாலியல் வன்கொடுமை இதுவாகும். மதுவும், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களும் தடையின்றி கிடைப்பதுதான் இத்தகைய குற்றச்செயல்கள் பெருகுவதற்கு முக்கியக் காரணம் ஆகும். இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனையை விரைவாகப் பெற்றுத்தர வேண்டும். போதைப்பொருட்கள் ஒழிப்பு, தீவிர கண்காணிப்பு ஆகியவற்றின் மூலம் தமிழகத்தில் இனி எங்கும் பாலியல் வன்கொடுமை நடக்காத நிலையை தமிழக காவல்துறை ஏற்படுத்த வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.