காஞ்சிபுரம் காவலர் கொலை!! சீருடையில் இல்லாததால் போலீஸ் என்று தெரியாமல் அடித்துக்கொன்றோம்

காஞ்சிபுரத்தில் தனியார் பள்ளியில் மது அருந்தியவர்களை எச்சரித்த காவலரை அடித்துக்கொன்ற வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

murder

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் ஒரு தனியார் பள்ளியில் இரவு வேளையில்மது அருந்தியவர்களை பணி முடித்துவிட்டு அந்த வழியே வந்த மோகன்ராஜ் என்ற காவலர் எச்சரித்துள்ளார். அப்போது போதையிலிருந்த அந்த நபர்கள் காவலரை அடித்து கொன்று தப்பிவிட்டனர்.

இதனை அடுத்து போலீசார் காவலர் மோகன்ராஜை அடித்துக்கொன்ற நபர்களை அவர்களது கைரேகை மற்றும் சில ஆதரங்களை வைத்து தனிப்படை அமைத்து போராடிவந்தனர். இந்நிலையில் காவலரை அடித்து கொன்ற வழக்கில் திருமங்கலத்தை சேர்ந்த வேல்முருகன் மற்றும் எல்லப்பன் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.

murder

murder

மேலும் அவர்களிடம் நடந்தப்பட்ட விசாரணையில் சம்பவத்தன்று தாங்கள்தனியார் பள்ளியில் மது அருந்திக்கொண்டிருந்தோம். அப்போது அங்கு வந்து எச்சரித்த நபர் மீது ஆத்திரமடைந்த இருவரும், உடைந்த மதுபாட்டில் மற்றும் கற்களால்அவரது தலையில் தாக்கி கொன்றுவிட்டு தப்பியோடினோம். அவர் சீருடையில் இல்லாததால் அவர் காவலர் என்பது எங்களுக்கு தெரியாது என வாக்குமூலத்தில் கூறியுள்ளனர்.

murder police
இதையும் படியுங்கள்
Subscribe