கணவர் இறந்த துக்கம் தாங்காமல் விபரீத முடிவெடுத்த மனைவி

kanchipuram pillayarpalayam madam husband and wife incident 

கணவர் இறந்த துக்கம் தாங்காமல் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் பிள்ளையார்பாளையம்மடம் பகுதியை சேர்ந்தவர் செல்வம். இவரின் மனைவி காமாட்சி (வயது42).கடந்த 29ம் தேதி செல்வம் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். இதனால் கணவர் இறந்த துக்கம் தாங்க முடியாமல் விரக்தி அடைந்த காமாட்சி இரண்டு நாட்களாக தனிமையில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று காலை 5 மணியளவில் வீட்டில் இருந்து வெளியில் சென்றவர் வெகுநேரமாகியும்வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் காமாட்சியை தேடி உள்ளனர். அப்போது காமாட்சி பிள்ளையார்பாளையத்தில் உள்ள குளத்தில் விழுந்து தற்கொலை செய்து கொண்டதைகண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்துபோலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். கணவர் இறந்த துக்கம் தாங்காமல் மனைவி குளத்தில் குதித்து தற்கொலை செய்துகொண்டசம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும்ஏற்படுத்தியுள்ளது.

kanchipuram police
இதையும் படியுங்கள்
Subscribe