kanchipuram pavapetta husband and wife incident 

கணவர் இறந்த அதிர்ச்சிசெய்தியைகேட்டு மனைவியும் உயிரிழந்த சம்பவம் சோகத்தைஏற்படுத்தியுள்ளது.

Advertisment

காஞ்சிபுரம்பாவாப்பேட்டைபகுதியைச் சேர்ந்தவர் துரைசாமி (வயது 77). இவருக்கு மல்லிகா (வயது 68) என்ற மனைவியும் இரு மகன்கள்மற்றும் ஒரு மகள் உள்ளனர். நேற்று முன்தினம் இருவரும் வழக்கம்போல் இரவு உணவுஅருந்திவிட்டுதூங்கசென்றுள்ளனர். இந்நிலையில் நேற்று அதிகாலை மல்லிகா தனது கணவர் துரைசாமியை எழுப்பி உள்ளார். அப்போது அவர் எவ்வித அசைவும் இன்றிபடுக்கையில் இருந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மல்லிகா இதுகுறித்து தனதுகுடும்பத்தினருக்குதெரிவித்துள்ளார். அவர்கள் துரைசாமியை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்குஅழைத்துசென்று பரிசோதனை செய்தபோது துரைசாமி ஏற்கனவே மாரடைப்பு காரணமாக இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisment

கணவர் இறந்த செய்தியைவீட்டில் இருக்கும் மல்லிகாவுக்குதொலைபேசிமூலம் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். கணவர் இறந்த அதிர்ச்சிதகவலைகேட்ட மல்லிகாவுக்குமாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து மல்லிகாவும் உயிரிழந்தார். கணவன் மற்றும் மனைவி இருவரும் உயிரிழந்த சம்பவம்பாவாப்பேட்டைபகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.