காஞ்சிபுரம் மாவட்டம் பல்லவர் மேடுபகுதியைச் சேர்ந்தவர் சந்தானம் (வயது 32). இவரது மனைவி வேண்டா (வயது 26). இவர்களுக்கு இரண்டு வருடங்களுக்கு முன்புதிருமணம் நடைபெற்றது. இதையடுத்து வேண்டா7 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். மேலும் சந்தானம் மதுவுக்கு அடிமையாகி உள்ளார். இதனால் மனைவியை அடித்துக் கொடுமைப்படுத்துவதும், நடத்தையில் சந்தேகப்பட்டும் வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்றும் வழக்கம் போல் சந்தானம் குடித்துவிட்டு வந்து மனைவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் அவரது மனைவிஆத்திரம் அடைந்துள்ளார். மேலும் மேலும் சந்தானம் வேண்டாவிடம் வாக்குவாதம் செய்துதகராறில்ஈடுபட்டு வந்துள்ளார்.அப்போதுவீட்டில் இருந்தஅம்மிக் கல்லைத்தூக்கி சந்தானத்தின் தலையில் போட்டுள்ளார். மேலும் ஆத்திரம்அடங்காமல்பக்கத்தில் இருந்தகத்தியை எடுத்து சந்தானத்தின் கழுத்தை அறுத்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த சந்தானம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதையடுத்து கணவன் உயிரிழந்ததை அறிந்த வேண்டா வீட்டில் தூக்கிட்டுத்தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்தபோலீசார்கணவன் மற்றும் மனைவி ஆகியோரின் சடலத்தை மீட்டுமருத்துவமனைக்குப்பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்தசம்பவம்குறித்துபோலீசார்தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். குடித்துவிட்டு வந்து தகராறு செய்தகணவரைகொன்றுவிட்டு மனைவியும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம்அப்பகுதி மக்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.