/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/cm3433333_0.jpg)
காஞ்சிபுரம் மாவட்டம், முத்தியால்பேட்டையில் விஷவாயு தாக்கி உயிரிழந்த இரண்டு பேரின் குடும்பத்திற்கு தலா ரூபாய் 10 லட்சம் வழங்க தமிழக முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழக முதல்வர் பழனிசாமி வெளிட்டுள்ள அறிக்கையில், "காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் வட்டம், முத்தியால்பேட்டை கிராமத்தில் அமைந்துள்ள கழிவுநீர் பாதாள சாக்கடையை 20.08.2020 அன்று சுத்தம் செய்வதற்காக இறங்கும்போது வி.லட்சுமணன் மற்றும் இவரை காப்பாற்ற சென்ற சுனில் ஆகிய இருவரும் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.
இச்சம்பவத்தில் உயிரிழந்த லட்சுமணன் மற்றும் சுனில் ஆகிய இரண்டு நபர்களின் குடும்பத்தினருக்கும்எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்தசம்பவம் தொடர்பாக உரிய விசாரணை மேற்கொண்டு சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க நான் உத்தரவிட்டுள்ளேன். இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த இரண்டு நபர்களின் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாய் வழங்க, காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகத்திற்கு நான் உத்தரவிட்டேன்" இவ்வாறு முதல்வர் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)