/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/sri perumpudur (2).jpg)
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே நல்லூரில் தனியார் தொலைக்காட்சியில் செய்தியாளராக பணியாற்றி வந்த மோசஸ் என்பவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
செய்தியாளர் மோசஸ் நல்லூரில் நடக்கும் குற்றச்சம்பவங்களை காவல்துறையினருக்கு அவ்வப்போது தெரிவித்து வந்ததாகவும், இதனால் ரவுடிக்கும்பல் அவரை வெட்டிக்கொலை செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து, மோசஸ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றன. விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில் மூன்று பேரை கைது செய்த காவல்துறையினர், தவமணி என்பவரை தீவிரமாக தேடி வருகின்றன. இந்த கொலை காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Follow Us