Advertisment

"கட்சி தொடங்கி 24 மணி நேரத்தில் ஆட்சியைப் பிடிப்போம் என்கிறார்கள்" - ஸ்டாலின் பேச்சு...

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள குன்னம் கிராமத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, மக்களின் குறைகள் மற்றும் தேவைகளை அவர் கேட்டறிந்தார்.

Advertisment

கிராம சபைக் கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், "கட்சித் தொடங்கிய 24 மணி நேரத்தில் ஆட்சியைப் பிடிப்போம் எனச் சொல்கிறார்கள். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் இன்னும் மர்மமாக, கேள்விக் குறியாகவே உள்ளது. விசாரணை கமிஷனை நீடிக்கிறார்களே தவிர, முடிவு வரவில்லை. நானும் ரவுடி, நானும் ரவுடி எனச் சொல்வதுபோல் தான் விவசாயி, விவசாயி என முதல்வர் கூறி வருகிறார். விவசாயி எனக் கூறிவரும் முதல்வர் பழனிசாமி விவசாயிகளுக்காக எதையும் செய்யவில்லை" என்றார்.

Advertisment

இன்று முதல் தமிழகம் முழுவதும் 10 நாட்களுக்கு 16,000 கிராம சபைக் கூட்டங்களை நடத்த தி.மு.க. திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Grama Sabha Speech
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe