Advertisment

காஞ்சிபுரம், செங்கல்பட்டிலும் இளவரசி, சுதாகரன் சொத்துக்கள் அரசுடமை! 

asset

சொத்துகுவிப்பு வழக்கில் தண்டனை பெற்றஇளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு சொந்தமான 6 சொத்துகள் அரசுடைமையாக்கப்படுவதாக சென்னை மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருந்த நிலையில்தற்பொழுது காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள சிலசொத்துக்களும் அரசுடைமையாக்கப்பட்டுள்ளது.

Advertisment

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்துள்ள ஊத்துக்காடு பகுதியில்அவர்களுக்கு சொந்தமான 300 ஏக்கர் நிலம் அரசுடைமையாக்கப்பட்டது. அதனையடுத்து மாவட்ட ஆட்சியர் மேகேஸ்வரிநேரில் ஆய்வு மேற்கொண்டார்.

Advertisment

Sasikala

உச்சநீதிமன்ற மேல்முறையீட்டு வழக்கில் 14/02/20217 அன்று வழங்கப்பட்ட இறுதி தீர்ப்பின் படி, சென்னை வருவாய் மாவட்டத்திற்குட்பட்ட இளவரசி, சுதாகரனின் பெயரிலுள்ள 6 சொத்துகள் அரசின் சொத்து என உரிமை மாற்றம் செய்யப்பட்டு அதன்படி, சென்னை டிடிகே சாலை ஸ்ரீராம் நகரில் உள்ள லெக்ஸ் பிராப்பர்டி, டெவலப்மெண்ட் நிறுவனத்தின் பெயரில் உள்ள சொத்துகள் அதேபோல்சென்னை வாலஸ் தோட்டத்திலுள்ள 5 சொத்துக்கள் அரசுடைமையாக்கப்பட்டுள்ள நிலையில்,காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டிலும் சொத்துக்கள் அரசுடைமையாக்கப்பட்டுள்ளது.

suthakaran Ilavarasi sasikala
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe