Kanchipuram blast death toll rises; Cracker factory owner arrested

Advertisment

காஞ்சிபுரத்தில் நிகழ்ந்த பட்டாசு வெடி விபத்தில் ஒன்பது பேர் உயிரிழந்த நிலையில், அந்த ஆலையின் உரிமையாளர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் குருவிமலை பகுதியில் சுமார் 20 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த பட்டாசு ஆலை ஒன்றில் இன்று காலை 11:30 மணிக்கு வெடி விபத்து ஏற்பட்டது. இதில் முதல்கட்டமாக 8 பேர் உயிரிழந்த நிலையில் சிகிச்சை பெற்று வருபவர்களை அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேரில் சந்தித்துநலம் விசாரித்தார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் உயிரிழந்ததால் உயிரிழந்தோர்எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.

தொடர்ந்து ஆலையின் உரிமையாளர் நரேந்திரனை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் பட்டாசு ஆலை உரிமையாளர் நரேந்திரனை போலீசார் கைது செய்துள்ளதாகத்தகவல் வெளியாகியுள்ளது. விபத்து எப்படி நடந்தது என்பது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.