அத்திவரதரை தரிசிக்க அலைமோதிய கூட்டம் - மூச்சு திணறி 4 பேர் உயிரிழப்பு

காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள வசந்த மண்டபத்தில், அத்திவரதர் கடந்த 18 தினங்களாக பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். அத்திவரதர் தினமும் ஒரு பட்டாடையில் பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு காட்சி அளித்தார். அத்திவரதரை தரிசிக்க அதிகாலையிலேயே பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

a

நேற்று சந்திரகிரகணம் என்பதால் அதற்கு பின்நடை திறக்கப்பட்டு சாமிதரிசனம் நடைபெற்று வந்த நிலையில் இன்று பக்தர்கள் கூட்டம் அதிகம் இருந்தது. பெருமாளின் நட்சத்திரமான திருவோணநட்சத்திரம் இன்று என்பதால் மூன்று மடங்கு கூட்டம் அதிகரித்தது. திருவோண நட்சத்திரத்தில் சாமியை தரிப்பதால் ஒரு லட்சம் பக்தர்கள் என்ற வழக்கத்தை விடவும் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் குவிந்த வண்ணம் இருந்தனர். மாவட்ட நிர்வாகம் சார்பில் பல முன்னேற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

ஆனாலும் கூட்டத்தால் வாலாஜாபாத் வரை சுமார் 10 கி.மீட்டர் தொலைவிற்கு வாகன நெரிசலும் ஏற்பட்டது. சற்றும் எதிர்பாராத மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையும் கூட்டத்தை கட்டுபடுத்தி வந்தனர். இந்நிலையில் மதியம் கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சு திணறலால் மயங்கிவிழுந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அனுமதிக்கப்பட்ட பெண் பக்தர் உள்பட 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதன் பின்னர் மேலும் ஒரு பக்தர் உயிரிழந்தார். மேலும் மூவர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.

kanchipuram
இதையும் படியுங்கள்
Subscribe